For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எனக்கு டிடி தான் செலிபிரிட்டி..நினைத்தாலே மனதில் இருக்கும் பாரம் போய்விடும்..புகழ்ந்து தள்ளிய ஜெய்!

  |

  சென்னை: அவினி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, நடிகைகள் மாளவிகா சர்மா, அமிர்தா, ரைசா, டி.டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல்.

  இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நவம்பர் 4ஆம் தேதி வெளியிடுகிறது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  இந்நிலையில் நடிகர் ஜெய் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  குஷ்பூவுக்கு கோயில் கட்டியதை பார்த்தபோது சுந்தர் சி ரியாக்ஷன் என்ன தெரியுமா? குஷ்பூவுக்கு கோயில் கட்டியதை பார்த்தபோது சுந்தர் சி ரியாக்ஷன் என்ன தெரியுமா?

  நெகட்டிவ் ரோல்

  நெகட்டிவ் ரோல்

  கேள்வி: இயக்குநர் சுந்தர்.சி. குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: 2022ம் ஆண்டு குற்றம் குற்றமே, வீரபாண்டியபுரம், பட்டாம்பூச்சி, எண்ணி துணிக உள்பட நான்கு படங்கள் வெளிவந்துள்ளது. 5வது படமாக காபி வித் காதல் வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நடிகரின் தனித்திறமையை நன்கு உணர்ந்தவர் இயக்குநர் சுந்தர்.சி. அவர் சொல்லித்தான் நெகட்டிவ் ரோல் என்னால் செய்ய முடியும் என்று உணர்ந்தேன். முதலில் பட்டாம்பூச்சி திரைப்படத்தில் நடிக்க மறுத்தேன். கதை கேளுங்கள் என்றார். கதை கேட்டவுடன் கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, அதன் பிறகே நடித்தேன்.

  பொழுதுபோக்கான படம்

  பொழுதுபோக்கான படம்

  கேள்வி: காபி வித் காதல் படத்தில் நடித்தது குறித்து...

  பதில்: பட்டாம்பூச்சி படப்பிடிப்பு முடிந்த இரண்டு நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. காபி வித் காதல் படமானது Pleasant Love Story. நடிகை அமிர்தாவுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளேன். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரொம்ப இனிமையானவர். இயக்குநர் சுந்தர்.சி. படக்குழுவினரிடம், பட்டாம்பூச்சி சுதாகர் வெளிவராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில் காபி வித் காதல் படமானது நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படம். மக்கள் பிரச்னைகளை மறந்து சிரிக்கக்கூடிய படமாக தான் எப்பொழுதும் இயக்குநர் சுந்தர்.சி. எடுப்பார். இந்த படமும் அப்படித்தான் என்றார்.

  9 - 10 டிகிரி செல்சியஸ்

  9 - 10 டிகிரி செல்சியஸ்

  கேள்வி: ஊட்டியில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: இன்னும் நான் அந்த பாதிப்பில் இருந்த வெளியே வரவில்லை. மற்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தும்போது, நமது உடலில் சோர்வு ஏற்படும். ஆனால் அங்கு அது இல்லை. அங்கு இருக்கும் குளிர் எனக்கு இதமாக இருந்தது. நாம் ஷூட்டிங்கின்போது ப்ரைமிற்குள் இருந்தால் போதும். இயக்குநர் ஒரு நாள் வந்து மழையில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட வேண்டும் என்றார். நான் நினைத்தது என்னவென்றால், காமெடி செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அது நிஜமாகும்போது, அதுவும் 9 - 10 டிகிரி செல்சியஸின்போது எங்கள் மீது லாரியில் இருக்கும் தண்ணீரை எங்கள் மீது பீய்ச்சி அடித்தனர். இதை கூட தாங்கிக் கொள்ளலாம். தண்ணீர் அடிப்பதை நிறுத்தி விட்டால், அந்த குளிர்ந்த காற்று அடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன். மேலும் மழையின்போது குளிரும். குளிரை வெளிக்காட்டாமல் டயலாக் பேச வேண்டும் என்பது கடினமாக இருந்தது என்றார்.

  டி.டி.தான் எனது செலிபிரிட்டி

  டி.டி.தான் எனது செலிபிரிட்டி

  கேள்வி: டி.டி.

  குறித்து

  நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: நான் சுப்பிரமணியபுரம் படம் நடித்துக் கொண்டிருந்தபோது எனர்ஜியான தொகுப்பாளர் டி.டி தான். நாம் மனதளவில் பாதிக்கப்படும்பொழுது, டி.டி.யின் ஷோவை பார்த்தால், பாதிப்பிலிருந்து நம்மால் வெளியே வர முடியும். அதனால் எனக்கு அவரை பிடிக்கும். எங்கள் இருவரின் எண்ணங்களும் ஒரே மாதிரி இருப்பதால், அவர் எனக்கு சிறந்த நண்பரும் கூட. எனது தங்கைகள் மூவருக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். எங்கள் குடும்பத்தில் ஒருவரும் கூட. சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது, இயக்குநர் சசிகுமார் உங்களுக்கு தெரிந்த செலிபிரிட்டி இருந்தால் அழைத்து வாருங்கள் என்றார். நான் அழைத்து சென்றது டி.டி. தான். என்றார்.

  ரோபோ சங்கர்

  ரோபோ சங்கர்

  கேள்வி: நடிகர் சிம்பு, ஜீவா ஆகியோரின் நட்பு குறித்து ...

  பதில்: நடிகர் ஜீவா நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் வல்லவர். சின்ன வயதிலிருந்து நானும், சிம்புவும் நெருங்கிய நண்பர்கள். அந்த நெருங்கிய நட்பை ஜீவா, கலகலப்பு படத்திலிருந்து அடைந்து விட்டார். நேரம் கூடி வரும்பொழுது, நானும், சிம்புவும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம் என்றார். என்னை போல் முதன்முதலாக மிமிக்ரி செய்தவர் ரோபோ சங்கர். ஒரு சிலரை மட்டும் மிமிக்ரி செய்து வரும் சூழ்நிலையில், நம்மை மிமிக்ரி செய்யும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம் என்பதில் எனக்கு சந்தோஷம் என்றார்.

  வதந்திகள்

  வதந்திகள்

  கேள்வி: உங்களது லட்சியம் என்ன?

  பதில்: நான் 98 நல்ல விஷயங்கள் செய்யும்பொழுது, வெளியே வருவதில்லை. இரண்டு விஷயங்கள் தவறாக பொழுது பல வதந்திகள் வருகின்றன. சினிமாத்துறையில் எனக்கும், என் அண்ணன் சிம்புவும் குறித்த வதந்திகள் தான் அதிகம் வருகின்றன. இப்பொழுதெல்லாம் நாங்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை. நெகட்டிவ், பாசிட்டிவ் என எதுவாக இருந்தாலும் எங்களை குறித்த செய்திகள் வந்தால் போதும் என்ற எண்ணம் தான் உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், இதுவரை நான் எந்த ஒரு விருதையும் பெறவில்லை. இனிவரும் காலங்களில் விருது கிடைத்தால் நன்றாக இருக்கும். கடமை செய், பலனை எதிர்பார்க்காதே என்ற வகையில் எனது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=m5gGgXSFvX0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Avini Cine Max and Benz Media Produced by Sundar.C. Directed by actors Jeeva, Jai, Srikanth, Yogi Babu, actresses Malavika Sharma, Amrita, Raisa, DD and many others, the movie Coffee With Kadhal is made. Red Giant Movies will release the film on November 4. Yuvanshankar Raja has composed the music for the film. In this case, you can see the special interview given by actor Jai to our Filmibeat channel here.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X