வீட்டுக்கு வந்த உடனே எங்கம்மா குளிச்சிட்டு படுத்துடுவாங்க.. தீபா மகன்களின் கலாட்டா பேட்டி!
சென்னை: சினிமா மற்றும் சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வரும் தீபா சங்கர் தனது குடும்பத்துடன் கலகலப்பாக அளித்துள்ள பேட்டி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் தீபா செய்த காமெடியை எல்லாம் எப்போது பார்த்தாலும் வயிறு குலுங்க சிரித்து விடலாம். அந்தளவுக்கு தனது வெள்ளந்தியான நடிப்பால் மக்களை மகிழ்வித்து வருகிறார்.
மாயாண்டி குடும்பத்தால் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தீபா சங்கர். அந்த படத்தைத் தொடர்ந்து வெடிகுண்டு முருகேசன், கிடாரி, செம, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, மண்டேலா, டாக்டர், சொப்பன சுந்தரி, டிடி ரிட்டர்ன்ஸ், இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

டாக்டர் பட தீபா: கோலமாவு கோகிலா படத்தில் சரண்யா பொன்வண்ணனை வைத்து காமெடியில் கலக்கிய நெல்சன் டாக்டர் படத்தில் தீபா சங்கரை வைத்து வேறலெவல் கமெடி டிராக்கை செட் செய்து ரசிகர்களை கடைசி வரை என்டர்டெயின் செய்திருப்பார். ”நல்லா ஜாலியா இருந்துச்சு”, “நானே எந்திரிச்சு போயிடுறேன்” என இவர் டாக்டர் படத்தில் டைமிங்காக பேசும் ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தின. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் பெப்சி விஜயன் மனைவியாக நடித்தும் சிரிக்க வைத்திருப்பார்.
மெட்டி ஒலி மீனா: மெட்டி ஒலி சீரியலில் தான் சின்னத்திரையில் இவர் முதன் முதலில் அறிமுகமானார். மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தொடர்ந்து பல சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்து ஏற்கனவே பெண்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். கோலங்கள், வாணி ஆணி, சரவணன் மீனாட்சி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, செந்தூரப்பூவே, பூவா தலையா என பல சீரியல்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளி சீசன் 2விலும் பங்கேற்று பிரபலமானார்.

சமைச்சா ஃபுட் பாய்சன் ஆகிடும்: சங்கர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வரும் தீபாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கனீஷ் மற்றும் சேதுராம் இருவருமே படுசுட்டியாக உள்ளனர். அம்மாவின் அருமையான சமையல் பற்றி சொல்லுங்க என தொகுப்பாளினி கேட்க, சமைச்சதை சாப்பிட்டா ஃபுட் பாய்ஸன் ஆகிடும் என சேதுராம் கலாய்த்துத் தள்ளி விட்டார்.
குளிச்சிட்டு தூங்கிடுவாங்க: வீட்டுக்கு வந்த உடனே உங்க அம்மா உங்களை எப்படி பார்த்துப்பாங்க என மீண்டும் தொகுப்பாளினி கொளுத்திப் போட, வீட்டுக்கு வந்த உடனே குளிச்சிட்டு தூங்கிடுவாங்க என தொடர்ந்து டோட்டல் டேமேஜ் செய்து விட்டனர். இரவு 11 மணிக்கு வருவேன் அதான் என தீபாவும் சிரித்துக் கொண்டே சமாளித்து விட்டு தனது மகன்களை செல்லமாக திட்டிக் கொண்டு செம ஜாலியாக அளித்த பேட்டியில் மேலும், குடும்பம் குறித்தும் தனது வேலைகள் குறித்தும் நிறைய ஷேர் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











