வீட்டுக்கு பின்னாடி சுடுகாடு.. நான் அதை ஆசீர்வாதமாக பாக்கிறேன்.. நடிகை தீபா ஷங்கர்!
சென்னை: மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமான நடிகை தீபா ஷங்கர். அந்த சீரியலைத் தொடர்ந்து, கோலங்கள், வாணி ராணி என அடுத்தடுத்த தொடர்களில் நடித்து வந்தார். கடைக்குட்டி சிங்கத்தில் நடித்து பிரபலமாகி, சீரியல், சினிமா என இரண்டிலும் கலக்கி வரும் இவர், தனது வீடு தான் கோவில் என பேசி உள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் அட்டகாசமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தீபா சங்கர் அனைவரும் கொண்டாடும் நடிகையாக மாறி இருக்கிறார். அண்மையில் நடிகை தீபா ஷங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு தனது வீட்டை சுற்றி காட்டி பேட்டி அளித்து இருந்தார். அதில், திருமணத்திற்கு முன்பே இந்த இடத்தை என் மாமனார் வாங்கினார். கல்யாண பின் நிலத்தை பிரிந்து கொடுத்தார்கள், அதன் பின் என் கல்யாணத்திற்கு கொடுத்த 40 சவரன் நகை வித்துத்தான் முதலில் வீடு கட்டினோம்.

நடிகை தீபா ஷங்கர்: அதன்பின், நானும் என் வீட்டுக்காரும் சேர்ந்து உழைச்சோம், எங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு சுடுகாடு இருக்கு, நாங்க இந்த வீட்டுக்கு வரும் போது பல பேரு, சுடுகாடுக்கு பக்கத்தில் போய் வீடு கட்டுறீங்களே என பயமுறுத்தினார்கள். ஆனால், அந்த சுடுகாடோட ஆசிர்வாதத்தால் தான், இப்போ இந்த வீடு மூன்று அடுக்கு மாடியாக மாறியது. இதனால், நான் எப்பவும் இதை சுடுகாடாக பார்க்க மாட்டேன், இதை ஒரு கோவிலாகத்தான் பார்க்கிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார்.
நல்ல பேச்சு: மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய இவர், இன்றைய காலத்தில் பல பெண்கள் விட்டுக்கொடுக்காததால் தான் விவாகரத்து நடக்கிறது. அதற்காக, எல்லாத்தையும்விட்டு கொடுத்துவிட்டு குடும்பத்தில் நடக்கும் கொடுமையை பொருத்துக் கொண்டு இருக்கக்கூடாது. படித்து இருக்கிறோம் நிறைய சம்பாதிக்கிறோம் என்பதற்கான பெண்களுக்கு தலைக்கணம் இருக்கக்கூடாது என்றார். ஆண்களை விட பெண்கள் தான் முக்கியமாக கல்வி கற்க வேண்டும. இந்த சமுதாயம் மாறவேண்டும் என்றால் முதலில் கல்வியை பெண் பிள்ளைகளுக்கு தான் கொடுக்க வேண்டும். ஆண்களை விட பெண்கள் தான் முக்கியமாக கல்வி கற்க வேண்டும. இந்த சமுதாயம் மாறவேண்டும் என்றால் முதலில் கல்வியை பெண் பிள்ளைகளுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று நடிகை தீபா ஷங்கர் பேசி வருகிறார்.


Click it and Unblock the Notifications











