டபுள் தமாக்கா கொண்டாடும் மிர்னாலினி ...பாராட்டிய டாப் பிரபலங்கள்

சென்னை : சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. டப்ஸ்மேஷ் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர், ஸ்மைல் சேட்டையின் 2016 க்கான் சிறந்த ட்ப்ஸ்மேஷ் விருதினை பெற்றவர்.

Recommended Video

கடலூர் பொண்ணுதான் நானு | Actress Mirnalini Ravi Exclusive | Enemy | Filmibeat Tamil

விஷால்- ஆர்யா கூட்டணியின் அதிரடி படமான எனிமி மற்றும் சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் ஆகிய இரண்டு திரைப்படத்திலும் இவர்தான் கதா நாயகி.

ஒரு பக்கம் அண்ணாத்த ரிலீஸ், மறுபக்கம் மிருணாளியின் தீபாவளி டபுள் தமாகா என திளைத்திருக்க, நமது பிலிம்பீட் தளத்திற்கு, அவர் கொடுத்த ஸ்வாரஸ்யமான தகவல்கள் இதோ

தெலுங்கிலும் மிருணாளினி

தெலுங்கிலும் மிருணாளினி

கேள்வி : தெலுங்கில் கமிட் ஆகியுள்ள புதுபடம் பற்றி சொல்லுங்களேன்.

பதில் : ஆமாங்க. இன்னும் படத்துக்கு பேர் வைக்கல. நல்ல ஸ்க்ரிப்ட். அது மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட்க்காவே ரொம்ப நாள் வெய்ட் பண்ணேன். இப்ப கிடைச்சிருக்கு.

நானும் விஷாலும் ப்ரண்ட்ஸ்

நானும் விஷாலும் ப்ரண்ட்ஸ்

கேள்வி : நீங்க நடிச்ச தீபாவளி ரிலீஸ் படங்கள் ல, ரொம்ப பிடிச்ச, மனதைக்கவர்ந்த சீன் எது?

பதில் : எல்லாமே ரொம்ப முக்கியமான சீன்கள்தான். எனக்கும் கருணாகரணுக்கும் ஒரு காமெடி இட்ரோடக்ஷன் மாதிரி ஒரு சீன் நடக்கும். அந்த சீன் ரொம்பவே நல்லாருக்கும். அதே போல விஷால் எனக்காக ஒரு விஷயம் பண்ணிருப்பாரு. நான் சிம்பிளா, ப்ரண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு போயிடுவேன். அப்பறம் தான் "பத்தல" சாங் வரும். அந்த சீன் ரொம்ப காமெடியா நல்லா இருக்கும்.

லெஜன்ட் கிட்டருந்து பாராட்டு

லெஜன்ட் கிட்டருந்து பாராட்டு

கேள்வி : பிருந்தா மாஸ்டர் எப்படி மிருணாளினிய சமாளிச்சாங்க?

பதில் : நான் டான்ஸ் ஆடுவனான்னு ப்ரொட்யூசர், டைரக்டர்ஸ்-க்கு தெரியாது. அதானல மாஸ்டர்கிட்ட ஒரு நாள் முன்னாடியே வந்து ரிகர்சல் பண்ண சொல்லிருந்தாங்க. மாஸ்டர் சொல்லி குடுத்தத உடனே டக்க் டக்குன்னு பண்ணிட்டேன். அல்ரெடி ஸ்கூல் டைம்லயே நல்லா ஆடுவேன். "நீதான் நல்லா ஆடுறியேம்மா, உனக்கு டான்ஸ் தெரியுமோ தெரியாதோன்னு தான் ஒரு நாள் முன்னாடியே என்ன வர சொன்னாங்க"-ன்னு சொன்னாங்க. அது மட்டும் இல்லாம, ப்ரொட்யூசர், டைரக்டர்ஸ் கிட்டயும் இந்த பொண்ணு நல்லா டான்ஸ் பண்ணுதுன்னு சொன்னாங்க. அவ்ளோ பெரிய லெஜண்ட் கிட்டருந்து இப்படி ஒரு பாராட்டு கெடச்சது எனக்கு ரொம்பவே பெரியவிஷயம்.

பிக்பாஸும் மிருணாளினியும்

பிக்பாஸும் மிருணாளினியும்

கேள்வி : இன்னமும் உங்கள பிக்பாஸ்க்கு கூப்பிடறாங்களா?

பதில் : சீனன் 1,2 ல கூப்பிட்டாங்க. அப்பவே நான் க்ளியரா சொல்லிட்டேன். மொபைலே இல்லாம, பேமிலி, காண்டக்ட்டே இல்லாம, யாருண்ணே தெரியாதவங்க கூடல்லாம் என்னால அவ்வளவு சீக்கிரம் மிங்கிள் ஆக முடியாது, இருக்க முடியாதுன்னு. அவங்களும் புரிஞ்சிகிட்டாங்க.அப்பறம் கூப்பிடல.

இப்பவும் டப்ஸ்மேஷ் / ரீலிஸ்

இப்பவும் டப்ஸ்மேஷ் / ரீலிஸ்

கேள்வி : ஷூட்டிங்-ல நடிகர்கள் கூடல்லாம் டப்ஸ்மேஷ் பண்ணீங்களா?

பதில் : டப்ஸ்மேஷ் பண்ணி இனிமே யார இம்ப்ரெஸ் பண்றது , அதான் இப்ப நல்ல ஸ்டேஜ்ஹ் ல லாஞ்ச் ஆகிட்டோமே, இன்னும் எதுக்குன்னு அதுமேல ஒரு இண்ட்ரஸ்ட் போகல. ஷூட்டிங்-ல அடுத்த சீன் என்ன? எப்படி இருக்கும், அத எவ்வ்ளோ நல்லா பண்ணலாம்ன்னு அத நோக்கிதான் சிந்தனை ஓடிகிட்டு இருக்கும். எங்கயாச்சும் நல்ல லொகேஷன் பார்க்கும் போது, சும்மா எடுத்துருக்கோம். ஆனா, இன்னக்கு இதான் பண்ணனும்ன்னு டைம் டேபிள் ல்லாம் போட்டு பண்ணதில்ல.

நீங்கதான அது பாராட்டிய பிரபலம்

நீங்கதான அது பாராட்டிய பிரபலம்

கேள்வி : நடிகர் விக்ரம் குடுத்த பெரிய காம்ப்ளிமெண்ட் என்ன?

பதில் : முதல் முதல்ல செட் ல பார்த்தப்போ, நீங்கதான கண்ண உருட்டி, எக்ஸ்ப்ரசிவ்வா வீடியோவெல்லாம் பண்ணுவீங்கன்னு கேட்டாரு. எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்றதுண்ணே தெரியல. என்னோட டப்ஸ்மேஷ் பாத்தீங்களான்னு ஆச்சர்யமா கேட்டேன். அவரோட பையனுக்கு ஜோடியா "ஆதித்ய வர்மா" படத்திற்கு ஹீரோயின் தேடிகிட்டு இருந்தப்ப, நிறையபேரு என்ன சஜ்ஜஸ்ட் பண்ணாங்களாம். அதனால பார்த்திருக்காரு. "ரொம்ப நல்லா நடிக்கிறம்மா, வெரி நைஸ், வெரி எக்ஸ்ப்ரசிவ் ஐஸ்"-ன்னு சொல்லி பாராட்டுனாரு. அவர் எவ்ளோ பெரிய ஆக்டர். அவர் என்னோட சின்ன வீடியோவையும் நியாபகம் வச்சி பாராட்டினது மிகப்பெரிய கிஃப்ட். என்று மிகவும் சந்தோஷமாக நம்மிடையே பலவிஷயங்களை பகிர்ந்து கொண்டார் மிருநாளினி. மேலும் பல சுவாரஸ்ய கேள்விபதில்கள் பிலிமிபீட் தமிழ் யூட்யூப் தளத்தில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X