டேய் அண்ணா என்று அழைத்த தருணம்... விஜய் குடும்பத்தில் நடந்த சோகம்,SAC பேட்டி

சென்னை : சமூக வலைதளங்களில் இப்பொழுது மிகவும் ட்ரெண்டாகப் பேசப்பட்டு கொண்டிருப்பது நடிகர் விஜயின் தந்தையான இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஏ சந்திரசேகர் யூடியூப் சேனல் தொடங்கியதை பற்றித்தான்.

இவரது பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. அவர் பகிரும் பல தகவல்கள் அவரது ரசிகர்களையும், விஜய் ரசிகர்களையும் ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

சமீபத்தில் பிளாட்பாரத்தில் அமர்ந்து, இவர் பேசிய பதிவுகள் அனைத்தும் அவரது ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது.

அறிமுகம் அற்புதம்

அறிமுகம் அற்புதம்

எஸ் ஏ சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த ஒரு படத்தின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டார் இயக்குனர் எஸ்ஏசி.

அதன் பிறகு சினிமாவில் முன்னணி நாயகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என பலரையும் வைத்து படம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புது துவக்கம்

புது துவக்கம்

இவர் தொடங்கிய புது யூடியூப் சேனலில் தனது அனுபவங்களையும், கருத்துக்களையும் தனது வாழ்வில் தான் முன்னேறி வந்த பாதைகளையும், இந்த வெற்றி இடத்தை பிடிக்க தான் பட்ட கசப்பான அனுபவங்களையும் சோதனைகள், வேதனைகள் அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.

SAC பகிர்ந்து வரும் பல விஷயங்கள் ரசிகர்களை உற்றுப்பார்க்க வைத்துள்ளது. சமீபத்தில் வீடியோவில் அவர் கூறியுள்ள விஷயங்கள் நடிகர் விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவுகிறது.

விஜயின் அறிமுகம்

விஜயின் அறிமுகம்

1992 ஆம் ஆண்டு தனது மகனான விஜய்யை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அனைவரும் SACயின் மகன்தான் விஜய் என்று கூறி வந்தனர். ஆனால் விஜய் தற்போது படத்திற்கு படம் தனது உழைப்பினால் முன்னேறி வந்து, பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்து இன்று விஜயின் தந்தை தான் SAC என்று கூறுமளவிற்கு வளர்ந்து நிற்கிறார். என்று பெருமிதத்துடன் கூறினார். பூவே உனக்காக,லவ்டுடே, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, குஷி, ப்ரண்ட்ஸ், திருமலை, போக்கிரி, கத்தி, துப்பாக்கி, மாஸ்டர் என்று பேர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

தன்னுடைய குடும்பத்தை பற்றியும் சுவாரஸ்யமான பல தகவல்களை எஸ் ஏ சி பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில் எனக்கு இரண்டு குழந்தைகள் விஜய் மற்றும் வித்யா.

கடவுளுக்கு பிடிச்சிருச்சி போல

கடவுளுக்கு பிடிச்சிருச்சி போல

மூன்று வயதிலேயே படு சுட்டியாக இருக்கும் விஜயின் தங்கை வித்யா , அம்மா அப்பாவை கூட பெயர் சொல்லித்தான் அழைப்பாராம் விஜயை, டே அண்ணா என்று செல்லமாக கூப்பிடுவாராம் .வித்யா தனது மூன்றரை வயதில் இந்த உலகை விட்டு மறைந்ததை ஒரு தந்தையாக வலியுடன் தனது வேதனைகளையும் வெளிப்படுத்தினார் SAC.

பல பிள்ளைகள்

பல பிள்ளைகள்

இரண்டு பிள்ளைகளை கொடுத்த அந்த கடவுள் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டார் என்று பல நாட்கள் நான் வேதனைப்பட்டு உள்ளேன். ஆனால் அந்த வேதனை மறையும் அளவிற்கு விஜய் ஒருவரால் பல குழந்தைகள் எனக்கு கிடைத்துள்ளனர் என்று அவர் ரசிகர்களை தன் குழந்தைகள் என்று பாசத்துடன் கூறினார். இதுபோல் பல சுவாரசியமான தகவல்களை கூறிவிட்டு, இன்னைக்கு இது போதும்,இன்று தூக்கம் வருகிறது நான் தூங்கப்போகிறேன் என்று பிளாட்பாரத்தில் பாயை விரித்து படுத்துக் கொண்டார் SAC. ஒவ்வொரு முறை பிளாட்பாரத்தில் தூங்கி எழுந்திருக்கும் பொழுது, எனக்குள் ஒரு புது புத்துணர்ச்சி பிறக்கும் அது என்னை இன்னும் பல சாதனைகளை செய்ய ஊக்குவிக்கும் என்று கூறினார் SAC.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X