Depressionல செத்தே போயிருப்பேன்.. கண் கலங்கிய சோனா
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கவர்ச்சி, காமெடி, குணச்சித்திர வேடம் என வலம் வந்தவர் நடிகை சோனா.
தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெள்ளித்திரையில் தடம் பதித்தார் சோனா.
சமீபத்தில் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு சோனா பேட்டியளித்து பல தரப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

தயாரிப்பாளராக சோனா
தயாரிப்பாளர் கிடைக்காமல் வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வெப் சீரிஸ் தயாரிக்கும் ஐடியா உள்ளதா என்ற கேள்விக்கு, எதார்த்தமாக ஒரு நல்ல கதையை உடைய சைக்கலாஜிக்கல் த்ரில்லர் - ஐ தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

தமிழ், மலையாள சினிமா
அபி டெய்லர் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் தடம் பதித்துள்ளார் சோனா. அடுத்ததாக உள்ள திட்டங்கள் குறித்து பேசிய சோனா தமிழில் 2 படங்கள், மலையாளத்தில் 3 படங்களில் நடிக்கவுள்ளதாகவும் & வெப் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்தவர்
கவர்ச்சி நடிகைகளான சில்க் ஸ்மிதா, ஷகீலா, டிஸ்கோ சாந்தி இவர்களில் தங்களுக்கு பிடித்தவர் யாரென்ற கேள்விக்கு யோசிக்காமல் சில்க் ஸ்மிதா என சோனா பதில் கூறினார். குறுகிய காலத்தில் ரசிகர்களை கவர்ந்து இன்று வரையிலும் சில்க் ஸ்மிதா பேசப்படுவதை குறித்து கூறினார். சில்க் ஸ்மிதாவின் தைரியம் தனக்கு பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.

கடந்து வந்த சோனா
தன்னுடைய பெற்றோர்களின் இழப்பு குறித்து பேசிய சோனா அந்த இழப்பில் இருந்து ரொம்பவும் கஷ்டப்பட்டு மீண்டு வந்ததாக கூறியுள்ளார். மேலும் தான் ஏதோ நல்லது பண்ணியிருக்கேன் அதனால் தான் அதிலிருந்து வெளியே வந்தேன் இல்லையெனில் நானும் போயிருப்பேன் என கண் கலங்கினார் சோனா.


Click it and Unblock the Notifications











