எஸ்.பி.பி சாரை எப்படி இந்த புராஜெக்ட்ல கொண்டு வந்தீங்க.. தேவதாஸ் பார்வதி டீம் ஜாலி பேட்டி!
சென்னை: தேவதாஸ் பார்வதி எனும் படத்தை இயக்கி வரும் குழுவினரின் சிறப்பு பேட்டி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடைசியாக ஒர்க் பண்ணது இந்த தேவதாஸ் பார்வதி படத்தின் என்னோட பாஷா பாடலுக்குத் தான்.
இயக்குநர் ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில், ராஜ் எம்.ஆர்.கே, நக்ஷத்ரா மற்றும் பூர்ணிமா ரவி நடிப்பில் தேவதாஸ் பார்வதி படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்காக உருவாக்கப்பட்ட காதல் பாடலான என்னோட பாஷா நீதான் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.
கொரோனா காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த பாடல் உருவானது குறிப்பிடத்தக்கது.
பல பிரபலங்களால் வெளியான இந்த பாடல் யூடியூபில் செம வைரலானது.
எம்.ஜி.ஆருக்கு பாடல் பாடிய அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், அறிமுக நடிகரான ராஜ் எம்.ஆர்.கே வரைக்கும் பாடி அசத்தி உள்ளார்.

நடிகர் ராஜ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணன் கலந்து கொண்ட இந்த பேட்டியில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் எப்படி இந்த புராஜெக்டில் கலந்து கொள்ள சம்மதித்தார் என்ற கேள்விக்கு, "நான் சின்ன படம் பெரிய படம், பிரபலமான நடிகர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். புராஜெக்ட் நல்லா இருந்தா பண்ண தயங்கமாட்டேன்" என எஸ்.பி.பி சொன்ன மந்திர வார்த்தைகளை ரிவீல் செய்துள்ளனர்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நலம் சீராகி வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர். மறக்காம திறமையான அறிமுகக் கலைஞர்களின் இந்த பேட்டியை கண்டு அவர்களை உற்சாகப்படுத்தலாமே!


Click it and Unblock the Notifications











