துரோகிகள்.. விஜய், அஜித் பணம் சம்பாதிச்சாங்க.. ரஜினி அப்படி இல்லை.. ராஜகுமாரன் பேட்டி!

சென்னை: நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ராஜகுமாரன். இதன்பின், விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் போன்ற படங்களை இயக்கினார். பல யூடியூப் சேனல்களில் பல விஷயத்தை பேசி வரும் இயக்குநர் ராஜகுமாரன். எமது பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய், அஜித் ரஜினி பற்றி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேள்வி: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைவைத்து இருக்கும் அஜித் ரேஸ் பக்கம் சென்று விட்டார். விஜய் அரசியலுக்கு வருகிறார். சினிமாவில் இவர்களின் தேவை முடிந்துவிட்டதா?

Devayani Rajakumaran interview

பதில் : இந்த நேரத்தில் நாம் ரஜினி அவர்களை நினைக்க வேண்டும். அவர் நினைத்திருந்தால், எதில் வேண்டுமானாலும் சென்று இருக்கலாம். ஆனால், உடம்பும் முடியாத நேரத்திலும், இந்த சினிமா துறைக்கு நாம் மூலதனமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த எண்ணம் அஜித் சாரிடம் இருந்து இருக்க வேண்டும். நாம் சினிமாவின் மூலமாகத்தான் இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்கிறோம். அந்த சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்று அவர் நினைத்திருக்க வேண்டும். விஜய்க்கும் இந்த எண்ணம் இருந்திருக்க வேண்டும், அவர் அரசியலுக்கு சென்றதே மேலும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான். தமிழ் சினிமாவை இவர் விட்டுவிட்டு சென்றால், எவ்வளவு பெரிய வெற்று இடம் ஏற்படும் என்பதை இருவருமே நினைக்கவே இல்லை. சினிமாவை அவர்கள் ஒரு பணம் சம்பாதிக்கும் இடமாகத்தான் பார்த்திருக்கிறார்கள். ரஜினி ஒருவர் தான் அதை கடைபிடித்து வருகிறார். நானும் என் மனைவியும் நினைத்து இருந்தால், என் மகள்களை வேறு ஒரு துறைக்கு அழைத்து சென்று இருக்கலாம். ஆனால், அவர்கள் இருவரையும் சினிமா துறைக்குத்தான் அழைத்து வருகிறோம்.

தமிழ்நாட்டை கடந்த 50 வருடங்களாக தமிழர்கள் தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். வேறு யாரும் உள்ளே நுழைய வந்து ஆட்சி அமைக்கவில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும். இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவால் தான் அவர் இந்த அளவுக்கு உச்சத்தை அடைந்து இருக்கிறார். அதில், எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அந்த கட்சியை நீங்கள் ஆதரிக்காமல் எதிர்த்தால், ஒன்று நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டும், இல்லை துரோகியாக இருக்க வேண்டும் என்றார்.

கேள்வி: சோசியல் மீடியாவில் நீங்கள் பேசுவதை பலர் விமர்சனம் செய்கிறார்கள். அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தவறாக எதையும் நான் பேசவில்லை, நியாயமாகத்தான் பேசுகிறேன். மிகவும் சரியாகத்தான் பேசுகிறேன். அது மற்றவர்களுக்கு தவறாக தெரியும் பட்சத்தில் நான் எதுவும் செய்ய முடியாது. ஒரு படம் நன்றாக இல்லை என்றால், நன்றாக இல்லை என்று தான் சொல்லுவேன். சூரியவம்சம் படத்தை பார்த்துவிட்டு பல இளைஞர்கள் தன்னுடைய குடும்பத்தின் மீது அன்பு பாசத்தை வைத்தார்கள். இதுவரையில் என்னுடைய எந்த படத்திற்கும் சென்சார் கட்டு வாங்கியது இல்லை. அப்படி இருக்கும் போது ஒரு படம் நன்றாக இல்லை என்று சொல்வதற்கு எல்லா ரைட்ஸ் என்னிடம் இருக்கிறது. நான் எப்போதும் கருத்தை சொல்ல மாட்டேன் உண்மையைத் தான் சொல்வேன் என்று ராஜகுமாரன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X