‘ஜெயிலர்‘ பிட்டு படமா? தேவயானி புருஷனுக்கு முத்தி போச்சு.. கண்டித்த பிரபலம்!
சென்னை : தேவயானியின் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரன், அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், "நான் இப்ப வர படங்களை பார்ப்பதே இல்ல,ஜெயிலர் படத்தை பாக்கவே கொடுமையா இருந்தது, பாதி படத்துலயே ஓடி வந்துவிட்டேன். இதுல 600 கோடி வசூல் பண்ணி இருக்குனு சொல்றீங்க, ப்ளூ பிலிம் எடுத்தா கூடாதா நல்லா வசூல் பண்ணும், இதுல பார்ட் 2 வேற எடுக்குறாங்க. அந்த படம் மூலமா ரஜினி என்ன மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என பேசி இருந்தார். இது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையல் இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசி உள்ளார்.
இப்போது ராஜகுமாரனுக்கு, வேலையில்லை மூன்று வேளை சாப்பிட்டு விட்டு வீட்டில் சும்மா இருக்கிறார். இதனால், அவருக்கு என்ன செய்வது என்று தெரியாததால் youtube தேவையில்லாத விஷயங்களை பேசி, youtube ஜோக்கராக மாறி இருக்கிறார்.. ராஜகுமாரனின் அடையாளமே தேவயானியின் புருஷன் என்பது மட்டும் தான். தேவயானியை காதலித்த ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை எடுத்தார். அந்த படத்தில் விக்ரம், சரத்குமார் என பல நடிகர்கள் நடித்த போதும் தேவயானிக்காகவே தயாரிப்பாளரின் பணத்தில் காதலை வளர்த்துக்கொண்டார்.

ராஜகுமாரன்: தேவயானியை திருமணம் செய்த பிறகு 'திருமதி தமிழ்' என்ற படத்தை எடுத்தார். அந்த படம் தோல்வி படமானதால் தேவயானி இதற்கு மேல் எந்த படத்தையும் எடுக்க வேண்டாம். நடிக்க வேண்டாம் வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார். அப்போது அமைதியாக சரி என சொன்ன ராஜகுமாரன் இப்போது youtube சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில், உதிரிப்பூக்கள் எல்லாம் ஒரு படமா என வாய்க்கு வந்ததை பேசினார். அதைத்தொடர்ந்து பல youtube சேனல்கள் அவரை அழைத்து பேட்டி எடுத்து வருகின்றனர். கமல் ஒரு நடிகரா? சரத்குமார் ஒரு நடிகரா? கண்டதை பேசி வந்த ராஜகுமாரன் இப்போது ரஜினியிடம் நெருங்கி ஜெயிலர் ஒரு படமா என கேட்டு எடுத்துள்ளார். ஜெயில் படமா என கேட்கும் ராஜகுமாரன் எத்தனை காவியமான படத்தை எடுத்துவிட்டார்.
முத்திப்போச்சு: எத்தனை பேர் அவரை கிண்டல் செய்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ராஜகுமாரன் பேசி வருகிறார். அவரை என்ன செய்வது என்றே தெரியவில்லை. உண்மையாகவே மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் மருந்து கொடுத்து சரி செய்துவிடலாம், இவரின் பேச்சால் மற்றவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். ராஜகுமாரனுக்கு முத்தி விட்டது. பலருக்கு பலவிதமான மனநோய் இருக்கும் அது போலத்தான் ராஜகுமாரனுக்கும் மனநோய் இருக்கிறது. அதை குணப்படுத்தவே முடியாது. பலரும் இவரை பற்றி பேசிவிட்டார்கள், இதற்கு மேல் அவரை பற்றி பேசுவதை விட்டுவிடுவது தான் நமக்கு நல்லது என்று பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











