தேவயானி போகாத கோவில் இல்ல.. என் மகள் பிறந்த நாளில் என்ன நடந்தது தெரியுமா? ராஜகுமாரன் பேட்டி!
சென்னை: 2000களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தேவயானி நடித்த காதல் கோட்டை, சூர்ய வம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என, தெனாலி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றன. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய 4 திரைப்படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரன், தேவயானி தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் இனியா, Zee தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். திறம்பட இசையை கற்று நேர்த்தியாக பாடி அசத்திய இனியாவை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

குழந்தை வேண்டாம்: இந்நிலையில்,இயக்குநர் ராஜகுமாரன் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், திருமணத்திற்கு பிறகு நமக்கு குழந்தை வேண்டாம் என்று தேவயானியிட சொன்னேன். ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு உலகத்துல நம்ம பிறந்தே இவ்வளவு கஷ்டப்படுறோம். நம்மளுடைய குழந்தையும் பிறந்து கஷ்டப்படணுமா என்று நான் நினைத்து, தேவயானியிடம் உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை. நம்ம இரண்டு பேரும் இருந்த போதும் நமக்கு குழந்தை வேண்டாம் என்று சொன்னேன், ஆனால், தேவயானி அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. குழந்தை வேண்டும் என்பதற்காக அவங்க போகாத கோயிலே இல்லை. குழந்தை வரம் வேண்டும் என தேவயானி ஸ்ரீரங்கம் பெருமாளை வேண்டுனாங்க, அங்க வேண்டுதல் படியே எங்களுக்கு குழந்தையும் உருவாச்சு.
மறக்கவே முடியாது: குழந்தை பிறப்பதற்கு பிப்ரவரி கடைசி வாரத்தில் டெலிவரி டேட் கொடுத்திருந்தாங்க. ஆனால், ஜனவரியிலேயே வலி வந்துவிட்டது. நான் மிகவும் பயந்து போய் ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். நைட்டு சரியா 12.5க்கு இனியா பிறந்தாள், அன்னைக்கு வைகுண்ட ஏகாதேசி என்பதால் கோவில்களில் 12.5க்கு சொர்க்கவாசல் திறக்கும் அந்த நேரத்தில் தான் இனியா பிறந்தால், பெருமாளை தேவயானி வேண்டிக்கொண்டே இருந்ததால், சொர்க்கவாசல் திறப்பு அன்னைக்கே இனியா பிறந்தாள், கிருஷ்ணர் கூட கரெக்டா 12 மணிக்கு பிறந்தார். ஆனால், இனியா 12.5க்கு பிறந்தாங்க அந்த நாளை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள் என்று அந்த பேட்டியில் ராஜகுமாரன் பேசி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தேவயானியின் இரண்டாவது மகள் பிரியங்காவிற்கு ஷாருக்கானை மிகவும் பிடிக்கும், அவர் படம் வெளியான முதல் நாளே படத்தை பார்த்துவிட வேண்டும் என்று அடம்பிடிப்பால், எப்படியாவது ஒரு படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் நடித்துவிட வேண்டும் என்பது அவளின் ஆசை என தேவயானி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications