»   »  தேவிப்பிரியா: Exclusive

தேவிப்பிரியா: Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேட்டி: ஷங்கர்

இன்று காலை வரை தலைமறைவாக இருந்த தேவிப்பிரியா சரணடையும் முன், நமக்கு தொலைபேசியில் சிக்கினார்.

ஏன் இந்தத் தலைமறைவு? எவ்வளவு காலத்துக்கு?

இப்படி ஒரு வாழ்க்கையை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட பதுங்கி வாழும் நிலையில் உள்ளேன். ஆனால் இதற்காக நான்வருத்தப்படவில்லை, கலங்கவில்லை.

உண்மையில், ஐசக்குக்காகத்தான் இத்தனை சிரமங்களையும் நான் தாங்கிக் கொள்கிறேன். அவரது மனைவியாக, இதை விட பெரியகஷ்டங்களையும் சந்திக்க நான் தயார்தான். விரைவில் நான் சரணடைந்து ஜாமீன் பெறுவேன்.

உங்களது தங்கை மீனாகுமாரிக்கும், ஐசக்குக்கும் கல்யாணம் ஆகி விட்டதாக சொல்கிறார்களே?

மீனா குமாரி எனது தங்கைதான். 3 வருடங்களுக்கு முன்பு ஐசக் அவரை மணக்க விரும்பினார். இதனால் நாங்கள் நெருக்கமாக பழகஆரம்பித்தோம். ஆனால் மீனா குமாரிக்கு இதில் விருப்பம் இல்லை. இதனால் கல்யாணம் வேண்டாம் என முடிவு செய்தாள். அவளாகவே எடுத்தமுடிவு அது.

ஆனால் அதற்குப் பிறகும் கூட எங்களிடம் எதிரியைப் போல அவள் நடந்து கொள்ளவில்லை. இன்னும் கூட ஐசக்குடன் அவள் நட்பாக,பாசத்தோடுதான் பழகி வருகிறாள்.

இப்போதும் கட நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பீச்சுக்குப் போகிறோம், ஜாலியாக இருக்கிறோம். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால்இதுதொடர்பான புகைப்படங்களில் கிராபிக்ஸ் செய்து தவறான கண்ணோட்டத்துடன் வெளியிட்டு உள்ளனர்.

பிரபல பெண் டிவி தயாரிப்பாளர்கள்-கம்-நடிகை வீட்டில் நீங்கள் ஒளிந்துள்ளீர்களாமே, நெஜமா?

ரொம்பத் தவறான தகவல் இது. டிவி சீரியல்களைப் பொறுத்தவரை அவர் எனககு பாஸ். அவ்வளவுதான். மற்றபடி அவருக்கும், இதற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. நான் அங்கு மறைந்திருக்கவில்லை.

உங்கள் மீதான வழக்குகள்?

எல்லாமே பொய் கேஸ்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள். உங்களை மாதிரியான பத்திரிக்கையாளர்கள் உண்மை என்ன என்பதை அறிந்து எழுதவேண்டும். இந்த வழக்குகள் எல்லாமே பொய் என்பதை நீதிமன்றத்தில் நான் நிரூபிப்பேன்.

ஸ்டெல்லாவின் வாழ்க்கையில் நான் எந்த வகையிலும் குறுக்கிடவில்லை. அதேபோல ஹேமாலினியையும் நான் மிரட்டவில்லை. எனவே இந்தப்புகார்களில் சற்றும் உண்மை இல்லை. போலீஸ் உதவியுடன் எனது வாழ்க்கையுடன் விளையாடிப் பார்க்கிறார் ஸ்டெல்லா. விரைவில் ஸ்டெல்லாவின்உண்மையான முகத்தை போலீஸாரும் புரிநது கொள்வார்கள்.

ஹேமமாலினி பல்டி:

இதற்கிடையே, ஐசக்கின் 2வது மனைவி என்று கூறப்படும் ஹேமமாலினி, நான் ஐசக்கின் மனைவியே கிடையாது என்று பல்டி அடித்துள்ளார்.

முதலில் பல்லாவரம் பதிவாளர் அலுவலகத்தில் ஐசக்குக்கும், தனக்கும் திருமணம் நடந்ததாக ஹேமமாலினி கூறியிருந்தார். ஆனால் இப்போது ஐசக்தனது கணவரே அல்ல என்று பல்டி அடித்துள்ளார்.

ஐசக் என் புருஷனே இல்லை!

ஹேமமாலினி கூறுகையில், ஸ்டெல்லா ஐசக்கின் முதல் மனைவி. அவர்களின் விவாகரத்துக்குப் பின்னர் நான் ஐசக்கை சந்தித்தேன். ஆனால் இதுநட்பாகத்தான் இருந்தது. எல்லை மீறிப் போகவில்லை.

அவரது வீடியோ கடையின் வாடிக்கையாளர் நான். அந்த வகையில் அடிக்கடி அங்கு போவேன். தனது கடையின் ஆயுத பூஜை விழாவுக்கு என்னைஅழைத்திருந்தார் ஐசக். அப்போது எல்லோரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம்.

இந்த நிகழ்ச்சியில் தேவிப்பிரியா, மீனாகுமாரி, சில சினிமா துணை நடிகைகளும் இதில் கலந்து கொண்டனர். அனைவரும் ஐசக்குடன் போட்டோஎடுத்துக் கொண்டனர்.

இந்தப் புகைப்படங்களை எப்படியோ வாங்கிக் கொண்ட ஸ்டெல்லா ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். இந்தப் போட்டாக்களில் எந்தத் தவறும்இருப்பதாக தெரியவில்லை. நண்பருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஸ்டெல்லா ஒரு சேடிஸ்ட். அடுத்தவர் உணர்வுகளை அவர் புரிந்து கொள்ளவே மாட்டார். என்னைக் கேட்டால் ஐசக், தேவிப்பிரியாவை விடஸ்டெல்லாதான் ரொம்ப அபாயகரமானவர்.

இப்படிச் சொல்வதால் ஐசக், தேவிப்பிரியாவுடன் நான் சமரசமாகி விட்டதாக நினைத்து விட வேண்டாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் இத்தனை உண்மைகளையும் நான் பத்திரிக்கைகளிடம் சொல்லியிருப்பேன். ஆனால யாரும் என்னிடம் வந்துகேட்கவில்லை.

இப்போது வெளியாகும செய்திகள் எல்லாமே கற்பனைச் செய்திகள்தான். எனது ஒரே கணவர் கிருஷ்ணகுமார்தான். அவரும் இப்போது என்னுடன்இல்லை. என்னைப் போன்ற பெண்ணின் பெயரை கெடுக்க முயற்சிக்க வேண்டாம்.

ஒரு பக்கம் ஸ்டெல்லாவின் தொல்லை. அவர் கொடுத்த வரதட்சணைக் கொடுமை புகாரில் என்னை சாட்சி சொல்ல வருமாறு அழைத்து அவர்நெருக்கினார். ஆனால் அப்படி சொல்லக் கூடாது என்று மறுபக்கம் ஐசக், தேவிப்பிரியாவின் நெருக்குதல்.

இதனால்தான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மொத்தமாக நான் எல்லோர் மீதும் புகார் கொடுத்தேன்.

ஐசக் மூலமாக எனக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. என் மூன்று குழந்தைகளும் என்னைப் பிரிந்த கணவர் கிருஷ்ணகுமார் மூலமாக பிறந்தவைதான் என்று ஹேமமாலினி கூறியுள்ளார்.

இதன் மூலம் ஐசக்-ஹேமமாலினி இடையே ஏதோ டீல் ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தேவிப்பிரியா-ஐசக்கிடம் இருந்து ஹேமா விலகிடதிட்டமிட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் பணம் கைமாறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Read more about: interview with devipriya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil