Raayan: தனுஷின் ராயன் ஒரு குப்பை படமா?.. கோடங்கி என்ன இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை அவரே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நேற்று அதாவது ஜூலை 26ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் ஏ சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கின்றது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக இந்த படத்தினை வரவேற்றுள்ளனர்.

Raayan Dhanush Journalist Kodangi

படம் பார்த்த பல விமர்சகர்கள் படத்தில் அதிகப்படியான வன்முறைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், இந்த படத்தின் மூலம் இயக்குநர் தனுஷ் ஆடியன்ஸ்க்கு என்ன சொல்லவருகின்றார் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் தனது, விமர்சனத்தில், ’படத்தில் வில்லனை பழிவாங்க, கையில் ஒரு குத்தூசியை வைத்துக்கொண்டு அனைவரையும் குத்தி குத்தி கொலை செய்கிறார். இதனால், குத்தூசி கோவிந்தன் என் பெயர் வைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

எப்படி ரசிப்பது?: இந்த படத்தை பத்தி படத்தின் இயக்குநர் தனுஷிடம் படத்தில் என்ன சொல்ல வரீங்க என்று கேட்டால், நிச்சயமா பதிலே இருக்காது. படத்தில் ஹீரோ நிம்மதியா இல்ல, வில்லன் நிம்மதியா இல்ல, படம் பார்க்கும் நாமும் நிம்மதியா இல்ல, இப்படி படம் முழுக்க அவலமா இருந்தால், படம் பார்ப்பவர்கள் எப்படித்தான் ரசிப்பது' என கேள்வி எழுப்பியிருந்தார்.

குப்பைப் படம்: இந்நிலையில் பத்திரிகையாளர் கோடங்கி ராயன் படத்தினை குப்பை என காட்டமாக விமர்சித்துள்ளார். நமது ஃபிலிமி பீட் தளத்தின் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த பத்திரிகையாளர் கோடங்கி, தனுஷ் ஒரு காலத்தில் நல்ல படங்களில் நடித்து வந்தார். இப்போது ராயன் போன்ற படத்தினை இயக்க, அதில் நடிக்க என்ன தேவை வந்தது. இந்த படத்தின் மூலம் அவர் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல வருகின்றார். படத்தில் என்ன கதை இருக்கின்றது என எனக்குட் தெரியவில்லை. ஆனால் படத்தின் முன்னோட்டமான டீசர் ட்ரைலரிலேயே படம் குறித்து நமக்குத் தெரிந்து விட்டது. அதில் இருந்தே தெரிந்துவிட்டது ராயன் படம் ஒரு குப்பை என. என்னைப் பொறுத்தவரையில் வன்முறை ஒரு குப்பைதான். நான் குப்பை எனச் சொல்வது வன்முறையைத்தான்.

பயமாக உள்ளது: உங்களிடம் வேறு கதைகளே இல்லையா? நல்ல கதைகள் இல்லை என்றால் ஏன் படம் எடுக்க வருகின்றீர்கள். ஏற்கனவே இந்த சமூகம் கெட்டு சீரழிந்து வருகின்றது. இன்றைக்கு சமூகத்தில் வன்முறை அதிகமாகிவிட்டது. பயமாக உள்ளது. இன்றைக்கு எங்கு சென்றாலும் சிறார்கள் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். சின்ன பசங்க எல்லாம் கத்தி எடுத்துக்கொண்டு போய் வெட்டுகின்றனர். உங்களை இன்றைக்கு பல இளைஞர்கள் பின் தொடர்கின்றார்கள். கோடிக்கணக்கான மக்கள் உங்களை பார்க்கின்றார்கள். தனுஷுக்கு நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாகக் கூட இதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். படத்தில் எதற்காக வன்முறை. இவ்வளவு வன்முறையுடன் காட்சிகளை அமைக்க என்ன தேவை இருக்கின்றது" என பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X