தனுஷ், மிருணாள் தாகூர் திருமணம் உண்மையா? அழுத்தம் கொடுக்கும் குடும்பம்.. பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூரும் அடுத்த மாதம் 14ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து மூத்த பத்திரிகையாளர் வெங்கடேஷன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்
இதில், தனுஷ், ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்த போது, தனுஷின் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்த முடிவை எடுக்க வேண்டாம் என பலமுறை கூறினார்கள். ஆனால், அதை எல்லாம் கேட்காமல் தனுஷ், ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். அப்போதே, தனுஷின் குடும்பத்தினர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் படி அழுத்தம் கொடுத்தனர். ஏனென்றால், தனுஷுக்கு 42 வயது தான் ஆகிறது, தனி ஆளாக இருக்கிறார். இதனால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி, கஸ்தூரி ராஜா பல முறை பேசி உள்ளார். ஆனால் தனுஷ், இரண்டாம் திருமணத்தை பற்றி இப்போதைக்கு பேச வேண்டாம், எனக்கு கமிட்மெண்ட் நிறைய இருக்கிறது என தீர்க்கமாக சொல்லிவிட்டார்.

ரகசிய திருமணமா: ஆனால், இப்போது மிருணாள் தாகூரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த பேச்சு கடந்த ஆண்டில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அக்ஷய் குமார் தன்னுடைய பட நிகழ்ச்சிக்கு தனுசை அழைத்திருந்தார். பட விழாவிற்கு தனுஷ் வந்ததும், மிருணாள் தாக்கூர், ஓடி சென்று தனுஷை வரவேற்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசு பொருளானது. இதைத்தொடர்ந்து, மிருணாளி தாகூர் பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. அதன் பின், தனுஷ் நடித்த "தேரே இஸ் மேன்" என்கிற ஹிந்தி படத்தின் சக்சஸ் மீட்டுக்கு மிருணாள் தாகூர் வருகிறார். நிச்சயமாக தனுஷ் அழைத்ததால் தான் மிருணாள் அந்த விழாவில் கலந்து கொண்டார். இதன்பிறகு தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பாலிவுட்டில் செய்தி பரவியது.
வாய்ப்பு இருக்கு: பாலிவுட்டில் கசிந்த செய்தி தற்போது கோலிவுட், மாலிவுட் வரை பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால், இதுவரை இருவரும் 'நோ' என்று தான் சொல்லி இருக்கிறார்கள். இதே போலத்தான் சமந்தா, நீரோ மோடி வதந்தி பரவியது, அப்போது இருவரும் நண்பர்கள் என்று தான் சொன்னார்கள், கடைசியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அதே போல, தனுஷ், மிருணாள் தாகூரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கு, இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள் அப்படி திருமணம் செய்து கொண்டால் ஒன்றும் பெரிய தவறு இல்லை என வெங்கடேஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











