புஷ்பா படக் காப்பியா தனுஷின் ‘ஓம்’?.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தந்த விளக்கம்!

சென்னை: அமரன் படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் டி55 படத்துக்கு 'ஓம்' என டைட்டில் வைக்கப்பட்டு 'ஃபர்ஸ்ட் ஸ்டிரைக்' என நேற்று படத்தின் அறிமுக வீடியோ வெளியானது.

சென்னையில் நேற்று அதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் பத்திரிகையாளர்கள் அந்த அறிமுக வீடியோவை பார்த்து ஏகப்பட்ட கேள்விகளை எழுப்ப, அதற்கு அவரும் அழகாக பதில் அளித்துள்ளார்.

Dhanush OM Movie is not a copycat of Pushpa - Director Rajkumar Periyasamy Explained

மரத்தை வெட்டுதல், ஹீரோ காப்பாற்றுதல் கதை என்றதுமே புஷ்பா படம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இந்நிலையில், நேற்று வெளியான முதல் பார்வை வீடியோவில் அதே காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இந்த படம் புஷ்பா படத்தின் பாதிப்பா? காப்பியா? என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பதில் அளித்துள்ளார்.

தனுஷின் 'ஓம்': நடிகர் தனுஷ் சிவபக்தி கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 'ஓம் நமச்சிவாயா' என்றே அவர் எப்போதும் சொல்லி வருவார். இந்த படத்திலும் ஆரம்பத்தில் தனுஷ் மரம் வெட்டும் கூலிகளை வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் போது, அவரை "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று சொல்லியே மக்கள் மாஸ் பில்டப் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 'கர' படத்தை போலவே 'ஓம்' என 2 எழுத்தில் தனுஷின் பட டைட்டில் அமைந்துள்ளது.

சிவராஜ்குமார் நடிப்பில் 1995ம் ஆண்டு ஏற்கனவே 'ஓம்' டைட்டிலில் கன்னட படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடந்த 2022ம் ஆண்டு பாலிவுட்டில் ஆதித்யா ராய் கபூர் நடித்த படத்துக்கும் 'OM' என்றே டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மீண்டும் ஓம் டைட்டிலை தனுஷ் படத்துக்கு வைத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

Dhanush OM Movie is not a copycat of Pushpa - Director Rajkumar Periyasamy Explained

புஷ்பா படக் காப்பியா?: இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மே, தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உள்ளிட்ட பல படங்கள் கடந்த ஆண்டு தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டில் தரவில்லை. இந்த ஆண்டு வெளியான கர படமும் கர்ஜிக்கவில்லை. இந்நிலையில், ஓம் படத்தின் முதல் பார்வையை பார்த்ததும் இது புஷ்பா படம் மாதிரியே உள்ளதே? என்கிற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்ப, இது வெறும் டைட்டில் இன்ட்ரொ தான். நீங்க சொல்கிற அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்த படத்தில் நிறைய லேயர்கள் உள்ளன. தனுஷ் சார், மம்மூட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்கள் வரும் போது, படம் என்ன மாதிரியான கதை என்பது உங்களுக்கு புரியும் என விளக்கம் கொடுத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

திருவண்ணாமலையில் இருந்து மரம் வெட்டச் சென்றவர்களுக்கு நேர்ந்த உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு உருவான படமாக இது இருக்குமா? என்கிற கேள்விக்கு, அதே கதை அல்ல என்றும் ஆனால், அதன் தாக்கம் இருக்கும் என்றும் கூறினார்.

அமரன் போல ஓம் கல்லா கட்டுமா?: கெளதம் கார்த்திக்கை வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ரங்கூன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன், சாய் பல்லவியை வைத்து கமல்ஹாசன் பேனரில் அவர் இயக்கிய அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை கடந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. பல வருடங்கள் கழித்து சூர்யாவுக்கே இப்போது தான் கருப்பு 300 கோடி வசூலை வாரிக் கொடுத்தது. அதே போல தனுஷுக்கு ஒரு வெற்றிப் படமாக ஓம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X