சிம்புவை, ஹன்சிகா காதலிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை: தனுஷ் கருத்து
சென்னை: சிம்புவை ஹன்சிகா காதலிப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என அவர்களது காதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ்.
சிம்புவையும், தனுஷியும் போட்டியாளர்கள் என சினிமா வட்டாரம் இன்னமும் பேசிக் கொண்டிருக்க, ஆனால் அவர்கள் இருவருமோ நாங்க ப்ரண்ட்ஸ் தாம்பா என பதிலடிக் கொடுக்கிறார்கள்.
தங்கள் படங்களில் ஒருவர் மற்றவரைக் கிண்டலடிப்பது மட்டும் தொடரத்தான் செய்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் சிம்புவின் 'வாலு' படத்தில் கூட இது மாதிரி ஒரு டயலாக் உள்ளதாம். அது குறித்து கேள்விப்பட்ட தனுஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்தாவது...

போட்டியா.. அப்டினா
எங்க ரெண்டு பேருக்குள்ளயும் என்ன போட்டி இருக்க முடியும். நாங்க ரெண்டு பேருமே நடிகர்கள் அவ்வளவு தான். ஆனா, ரசிகர்களை நாங்க எங்களோட தனித்துவமான, வித்தியாசமான நடிப்பால திருப்தி படுத்த நினைக்கிறோம்.

இப்ப தெளிவாயிட்டோம்...
எங்க ரெண்டு பேருக்குள்ள புரிதல் இல்லாம இருந்ததுக்குக் காரணம் சமீப காலமா நாங்க சரியா சந்திச்சு பேசாம இருந்தது தான். இப்போ நாங்க பேசிட்டோம். ரொம்பவே தெளிவாயிட்டோம். அதனால, எங்கள பத்தி வர்ற கமெண்ட்கள் பத்தி எங்களுக்குக் கவலையில்லை.

வாலுத்தனமான டயலாக்...
வாலு படத்துல ஒரு டயலாக் வருது, ‘ சில பசங்கள பாக்க, பாக்கத் தான் பிடிக்கும். ஆனா, உன்ன மாதிரி பசங்கள பாத்த உடனே பிடிக்கும்னு'...(இந்த முதல் டயலாக்கை தனுஷ் தமன்னாவிடம் ஒரு படத்தில் பேசுவார்...)

ஹன்சிகா மயங்கியதில் தப்பில்லை...
அது உண்மைதான். ஏனெனில் சிம்பு அழகானவர், ஹன்சிகா அவரைப் பார்த்த மாத்திரத்தில் காதலித்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஏனெனில் பெண்களை உடனடியாக வசீகரிக்கும் சக்தி சிம்புவிடம் உள்ளது. ஆனா, எனக்கெல்லாம் கொஞ்சம் நாள் ஆகும் என்கிறார் தனுஷ் சிரித்த படி.


Click it and Unblock the Notifications











