»   »  சுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்

சுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது சுசீலீக்ஸ், குடும்ப பிரச்சனை குறித்து கேள்வி கேட்டதால் தனுஷ் கோபப்பட்டு பாதியில் கிளம்பிச் சென்றுள்ளார்.

விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றனர். அப்போது தனுஷ் டிவி9 தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டி எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்தது.

சுசீ லீக்ஸ்

சுசீ லீக்ஸ்

சுசீ லீக்ஸ் பரபரப்பானபோது தனுஷின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் தனுஷை பேட்டி எடுத்த பெண் சுசீ லீக்ஸ் பற்றி அவரிடம் கேட்டார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சனையாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்தும் தனுஷிடம் கேள்வி கேட்கப்பட்டது.

கோபம்

கோபம்

சுசீ லீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை போன்றவை முட்டாள்தனமாக கேள்விகள் என்று கூறி தனுஷ் பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றுவிட்டார்.

பரபரப்பு

தனுஷ் பேட்டியில் இருந்து கிளம்பிச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகி சுசித்ரா தனுஷ் ஆட்களால் தாக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட பிறகு தான் சுசீ லீக்ஸ் புயல் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush walks out of a television interview after he was asked about Suchileaks and family problems.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil