தனுஷின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்.. பயில்வான் ரங்கநாதனின் 'கர' பட விமர்சனம்!

சென்னை: போர் தொழில் படம் மூலம் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கர. இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 30ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இந்த படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்,.

தனுஷ் நடித்திருக்கும் 'கர' படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தனுஷின் தந்தையாக நடித்திருக்கிறார். தனுஷ், மமிதா பைஜூவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் இந்த விஷயம் அவருடைய அப்பா கே.எஸ்.ரவிக்குமாருக்கு தெரியாது. தனுஷ் வேலை வெட்டி எதுவும் செய்யாமல் ஊர் சுற்றிக்கொண்டு அப்பா சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் செலவு செய்கிறார்.படம் ஆரம்பிக்கும் போதே தனுஷ் பிரிதிவிராஜ் உடன் சேர்ந்து கொண்டு எம்எல்ஏ வீட்டிற்கு திருட செல்கிறார்கள். இதுதான் என்னுடைய கடைசி திருட்டு, இதற்கு மேல் நான் திருட மாட்டேன் என சொல்கிறார் தனுஷ். இவர்கள் இருவரும் லாவகமாக பூட்டை உடைத்து திருடிக் கொண்டு இருக்கும்போது, எம்எல்ஏ மீண்டும் வீட்டுக்கு வந்து விட இருவரும் கையும் களவுமாக மாட்டிக்கொள்கின்றனர். அந்த நேரத்தில் தனுஷ் பிரித்திவிராஜை தப்பிக்க வைக்கிறார். ஆனால், தனுஷ் மாட்டிக்கொள்கிறேன்.

Dhanush kara Review
Photo Credit:

தனுஷின் 'கர': போலீசார் தனுசை கைது செய்து விசாரித்துக்கொண்டு இருக்கும் போது, தனுஷ் அங்கிருந்து தப்பித்து மமிதா பைஜூவிடம் செல்கிறார். நீ திருடன் என்று தெரிந்தும் நான் உன்னை திருமணம் செய்து கொண்டேன். இதுக்கு மேல் திருடக்கூடாது என சத்தியம் வாங்குகிறார். இதனால், இருவரும் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைக்கலாம் என யோசிக்கும்போது அப்பாவின் நிலத்தை விற்று ஓட்டல் ஒன்றை தொடங்க நினைக்கிறார் தனுஷ். இதற்காக தனுஷ் அப்பாவை தேடி வர, நிலத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து தான் டிராக்டர் வாங்கியதாக சொல்கிறார். ஒரு கட்டத்தில், டிராக்டர் வாங்கிய பணத்தை கட்டாததால் நிலத்தை வங்கி ஜப்தி செய்கிறது. இதனால்,அதிர்ச்சி அடைந்த கே.எஸ்.ரவிக்குமார் இறந்து விடுகிறார். அதன் பிறகு தனுஷ் நிலத்தை எப்படி மீட்டார் என்பது தான் கர திரைப்படத்தின் கதை.

நிச்சயம் தேசிய விருது: இந்த படத்தில் தனுஷ் அசுரன் திரைப்படத்தில் நடித்தது போலவே கரசாமியாக வாழ்ந்திருக்கிறார். ஒரு திருடன் எப்படி நடந்து கொள்வானோ அதே போலவே வாழ்ந்து இருக்கிறார். இந்த படம் தனுஷிற்கு நிச்சயமாக தேசிய விருதையும், தமிழக அரசின் விருதையும் வாங்கி தரும். அந்த அளவிற்கு தனுஷின் நடிப்பு இருக்கிறது. கருணாஸ் தனுஷின் தாய் மாமனாக நடித்திருக்கிறார். உணர்ச்சி பொங்க பல காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் நில இடங்களில் மெதுவாக சென்றாலும், குடும்பத்தோடு பார்க்க வேண்டிய நல்ல படம். 'கர' திரைப்படத்திற்கு பயில்வான் ரங்கநாதன் 100க்கு 75 மதிப்பெண் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X