ரியல் லைஃப்ல அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல பாஸ்.. வெட்கப்படும் ஹரிஷ் கல்யாண்.. ஸ்பெஷல் பேட்டி!
சென்னை: இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள தாராள பிரபு திரைப்படம் வரும் மார்ச் 13ம் தேதி திரைக்கு வருகிறது.
Recommended Video
சிந்து சமவெளி, பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுக்கு கோலிவுட்டில் ரசிகர்கள் வட்டம் பெருகியது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, ரைசா வில்சனுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் அவருக்கு சினிமாவில் இரண்டாவது இன்னிங்க்ஸை ஏற்படுத்தி தந்தது.
தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.
வரும் மார்ச் 13ம் தேதி ரிலீசாகவுள்ள அவரது தாராள பிரபு படம் குறித்த அவர், அளித்த ஸ்பெஷல் பேட்டி, தற்போது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வைரலாகி வருகிறது.
ரியல் லைஃப்லயும் இதே போல விந்து டோனேட் பண்ணும் வாய்ப்பு வருமா? என கேட்டதற்கு, அதெல்லாம் படத்துல மட்டும் தான் பாஸ்.. ஆளவிடுங்க என்ற ரேஞ்சுக்கு வெட்கப்பட்டு பேசியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.
மேலும், இந்த படம் அடல்ட் கன்டென்ட்டாக இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பார்க்கும் படியாக நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாக உருவாக்கி உள்ளோம், நிச்சயம் உங்களை ஏமாற்றாது என பேசியுள்ளார்.
படத்தில் விவேக் சார் உடன் நடித்தது, மற்றும் நாயகி தன்யா ஹோப்புடன் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி என பல விஷயங்களை ஹரிஷ் கல்யாண் ஷேர் செய்துள்ளார். அவரது பேட்டியை காண வீடியோவை க்ளிக் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications











