twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆதித்யா வர்மா மாதிரி போதைக்கு அடிமை ஆயிடாதீங்க - துருவ் விக்ரம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

    |

    Recommended Video

    நா தளபதி ரசிகன் | ACTOR DHRUV VIKRAM | ADITHYA VARMA TEAM INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

    சென்னை: நான் எப்படி நடந்துக்கணும்னு எங்க அம்மா சொல்லிக்கொடுத்திருக்காங்க. அதுவும் லேடீஸ்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு ரொம்ப கண்டிசனா சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்காங்க என்று ஆதித்யா வர்மா படத்தின் நாயகன் துருவ் விக்ரம் கூறியுள்ளார். நான் கிஸ் பண்ணப்ப எங்க அம்மா கண்ணை மூடிக்குவாங்க என்று தன்னுடைய சினிமா அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் துருவ் விக்ரம்.

    அதேபோல், நான் ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்திருந்ததால், அந்த படத்தின் கதை பிடித்திருந்தது. நிச்சயம் எனக்கு சேலஞ்சிங்கா இருக்கும்னு நினைத்துக்கொண்டு, யோசிக்காமலேயே இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிட்டேன் என்றார் இந்த படத்தின் நாயகியான பனிதா சந்து.

    Dhruv Vikram exclusive interview

    ஆதித்யா வர்மா படம் வெளியாவதற்கு முன்பாகவே கல்லூரி மாணவ மாணவியர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட துருவ், நான் என்னோட வேலையை செஞ்சிகிட்டு இருக்கேன். அவ்வளவு தான். அது மட்டுமில்லாம நான் எப்படி நடந்துக்கணும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க.

    இந்த படத்தோட ஆடியோ ரிலீஸப்போ, நான் என்ன பேசணும்கிறதை முன்கூட்டியே என்னோட அம்மாகூட டிஷ்கஸ் பண்ணினேன். எப்படி பேசணும், யார் யார் பேரை சொல்லணும், யாரைப் பத்தி பேசணும்னு முதல்லயே டிஷ்கஸ் பண்ணிதான் என்னோட ஸ்பீச்சை ரெடி பண்ணினேன்.

    Dhruv Vikram exclusive interview

    இந்த படத்துல லிப்லாக் கிஸ் சீன் நிறைய இருந்தது. அந்த சீன் வரும்போதெல்லாம் எங்க அம்மா கண்ணை மூடிக்குவாங்க. அதே மாதிரி நான் சிகரெட் பிடிக்குற சீன்ல கூட கண்ணை மூடிக்குவாங்க.

    துருவ் விக்ரமின் பெண் ரசிகைகளை... மனம் திறக்கும் பிரியா ஆனந்த்துருவ் விக்ரமின் பெண் ரசிகைகளை... மனம் திறக்கும் பிரியா ஆனந்த்

    தண்ணி அடிக்குற சீன்லயும் கண்ணை மூடிக்குவாங்க. அநேகமா படம் பாக்கும்போது கூட முழு படத்தையும் கண்ணை மூடிட்டு தான் பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன் என்றார் ஜாலியாக.

    ஆதித்யா வர்மா படத்தோட கோர் கான்செப்டே, அவன் இந்த மாதிரி தண்ணி அடிக்குறது, தம்மடிக்குறது, கஞ்சா அடிக்குறதுன்னு இந்த மாதிரி விஷயங்களை பண்ண ஆரம்பிச்சதுனால தான் அவன் அந்த மாதிரி ஆனான்.

    கடைசில கோர்ட் சீன்லயும் சரி, இல்ல ஹாஸ்பிடல் சீன்லயும் சரி, அவன் அந்த மாதிரியான கெட்ட விஷயங்களை பண்ணினதுனால தான் அவன் அப்படி ஆயிட்டான். அதனால, நான் உங்ககிட்ட கேட்டுக்கிறது என்னன்னா தயவு செய்து இந்த மாதிரியான கெட்ட விஷயத்துக்கெல்லாம் அடிக்ட் ஆயிடாதீங்க. ஆதித்யா வர்மா மாதிரி ஆயிடாதீங்க என்றார் துருவ் விக்ரம்.

    சூட்டிங் சமயத்தில எனக்கு ரொம்ப பிடிச்ச இடமா இருந்தது. பாம்பே தான். அங்கே, ஸ்கூல்ல சூட்டிங் நடந்தப்போ கொஞ்சம் கேப் கிடைச்சாலும் நான் நல்லா தூங்கிடுவேன். ஏன்னா எனக்கு தூங்குறது ரொம்ப பிடிக்கும் என்றார் பனிதா சந்து.

    ஆஃப் ஸ்க்ரீன்ல நாங்க என்ன பண்ணினோமோ அதைத்தான் ஆன் ஸ்க்ரீன்லயும் பண்ணினோம். அதையும் தாண்டி, எங்களுக்குள்ளேயே ஒரு ஃபிரண்ட்சிப் கேங் இருக்கும். அந்த கேங் பத்தி எதுலயும் நாங்க மென்சன் பண்ணவே இல்லை. அந்த கேங்ல தனுஷ், ஐஸ்வர்யா, ஆஷா, இருந்தாங்க. நாங்க எல்லோரும் மும்பையில பயங்கரமா என்ஜாய் பண்ணினோம்.

    உண்மையிலேயே ஒரு க்ளாஸ் ரூம்ல எப்படி இருப்போமோ அந்த உற்சாகம், என்ஜாய்மென்ட் இருந்திச்சி. நாங்க லைஃப ரொம்ப என்ஜாய் பண்ணினோம். அது தான் லைஃப் என்றார் அன்பு. எல்லோரும் என்கிட்டே நீங்க யாரோட ரசிகர்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட்றாங்க. நான் எப்பவுமே பிகில் ஃபேன் தான் என்று விடைபெற்றார் துருவ் விக்ரம்.

    English summary
    My mother has not taught me how to behave. Dhruv Vikram, the protagonist of the Adithya Varma film, shared his cinematic experiences with our FilmiBeat readers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X