Exclusive: 'விஜய் பற்றி தவறாக பேசினேனா'... நடிகை அக்ஷயா விளக்கம்!

நடிகர் விஜய் குறித்து தான் தவறாக பேசவில்லை என நடிகை அக்ஷயா தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் குறித்து தான் தவறாக எதுவும் பேசவில்லை என நடிகை அக்ஷயா தெரிவித்துள்ளார்.

ஆர்யாவின் களாபக் காதலன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அக்ஷயா. எங்கள் ஆசான், உளியின் ஓசை என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர், பின்னர் திருமணம் செய்துகொண்டு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது யாளி என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அக்ஷயா. இந்த படத்தை அவரது கணவர் பாலா தான் தயாரிக்கிறார். தமன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

விஜய்யின் புலி

விஜய்யின் புலி

அப்போது, யாளி என்ற தலைப்பு குறித்து விளக்குவதற்காக நடிகர் விஜய்யின் புலி படத்தை ஒப்பிட்டு சில கருத்துகளை தெரிவித்தார் அக்ஷயா. அது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியது. விஜய் ரசிகர்கள் அக்ஷயாவை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

தவறாக பேசவில்லை

தவறாக பேசவில்லை

இந்நிலையில் விஜய் குறித்து தான் தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என அக்ஷயா விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நம்மிடம் கூறியதாவது, "யாளி என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என செய்தியாளர்கள் கேட்டனர். அது ஒரு பெண் தெய்வம் எனக் கூறினேன். படத்துக்கும் யாளிக்கும் என்ன சம்மந்தம் எனக் கேட்டனர்.

விஜய் கேரக்டர்

விஜய் கேரக்டர்

அப்போது நான், புலி படத்தில் விஜய்யின் கேரக்டர் புலி போல் இருப்பதால் தான் அந்த தலைப்பை வைத்தனர். அதுபோல் தான் நானும் எனது படத்தில் வரும் ஜனனியின் கேரக்டரை குறிக்கும் வகையில் யாளி என பெயர் வைத்துள்ளேன். எனக் கூறினேன்.

திரித்து வெளியிடப்பட்ட செய்தி

திரித்து வெளியிடப்பட்ட செய்தி

ஆனால் இதனை தவறாக திரித்து செய்தி வெளியிட்டுவிட்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினர். சமூக வலைதளங்கள் முழுவதும் என்னை பற்றி தவறாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

பெண்களை மதிப்பவர்

பெண்களை மதிப்பவர்

நடிகர் விஜய் பெண்களை மதிப்பவர். ஆனால் அவரது ரசிகர்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என நினைக்கவில்லை. விஜய் பற்றி நான் தவறாக பேசவில்லை. சில செய்தி நிறுவனங்கள் தங்களுடைய வியாபாரத்துக்காக இப்படி செய்துவிட்டனர்.

மிகுந்த மனவேதனை

மிகுந்த மனவேதனை

இந்த சம்பவத்தால் நானும் எனது கணவரும், குடும்பத்தாரும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். நடிகை என்பதாலேயே வெகு சுலபமாக வார்த்தைகளை கொட்டிவிடுகின்றனர். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை அவர்கள் நினைத்து பார்ப்பதில்லை.

மலிவான விளம்பரம் தேடவில்லை

மலிவான விளம்பரம் தேடவில்லை

விஜய்யின் பெயரை பயன்படுத்தி மலிவான விளம்பரம் தேட நான் நினைக்கவில்லை. எனது படத்துக்கான விளம்பரத்தை முறையாக செய்தால் மட்டும் போதும் என நினைக்கிறேன். எனவே விஜய் குறித்து நான் தவறாக எதுவும் பேசிவில்லை என்பதை மீண்டும் தெளிவுப்படுத்துகிறேன்" என நடிகை அக்ஷயா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X