For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பேரு வச்சாலும் வக்காம போனாலும்" முரட்டு சிங்கில்சின் கனவுக்கன்னி அனகாவின் அந்த சிரிப்பு இருக்கே!

    |

    சென்னை : கடந்த காலத்தை திரும்பி பார்க்க வைக்கும் காமெடி படமாக, ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் டிக்கிலோனா. லொள்ளு சபா பட்டாளமே ஒன்றிணைந்த மசாலாவாக வந்த திரைப்படம்.

    கவுண்டர்களுக்கும், சந்தானத்தின் நக்கல் நையாண்டிக்கும் பஞ்சமே இல்லை.டிக்கிலோனா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மலையாளத்து பைங்கிளி அனகா. இவர் நட்பே துணை படத்தின் தமிழில் அறிமுகமானவர்.

    தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.தற்போது அணைத்து சமூகவலைத்தளத்திலும் ட்ரெண்டிங் இந்த படமும் பாடும் தான்.

    நடிகைக்காக உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டு திரியும் பிரபல காமெடி நடிகர்!!!நடிகைக்காக உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டு திரியும் பிரபல காமெடி நடிகர்!!!

    முதன்முதலில் அனகா

    முதன்முதலில் அனகா

    தென்னிந்திய மாடல் அழகியான அனகா, ரஞ்சன் ப்ரமோத் இயக்கிய மலையாள திரைப்படமான ரஷாதிகாரி பைஜூ ஒப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு மலையாளத்தில் பரவா, ரோசாப்பூ போன்ற படத்திலும் , தெலுங்கில் குணா 369 படத்திலும், நட்பே துணை என்ற தமிழ் படத்திலும் நடித்தவர். தற்போது சந்தானத்திற்கு ஜோடியாக டிக்கிலோனா திரைப்படத்திலும் நடித்துள்ளார். அனகாவின் ட்ரெண்டிங்கான டிக்கிலோனா பாடலின், வச்சாலும் வக்காம போனாலும் நடனத்திற்கு ரசிகர் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது. அது பற்றி அனகாவிடம் கேட்டபோது..

    வச்சாலும் வக்காம

    வச்சாலும் வக்காம

    கேள்வி : இப்படி ட்ரெண்டிங்-ல உங்க பாடல் வரும்ன்னு நினைச்சு பார்த்தீங்களா?

    பதில் : நிச்சயமா இல்ல. கேஷ்வலா, என்ஞாய் பண்ணி போட்ட ஸ்டெப்ஸ். எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்சி போச்சு. ரொம்ப வைரலா ஆகிட்டு இருக்கு. எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.தாறுமாரு ஸ்டெப்ஸ்

    ட்ரெண்டிங் ஸ்டெப்ஸ்

    ட்ரெண்டிங் ஸ்டெப்ஸ்

    கேள்வி : உங்கள பார்த்து, அது போல ஸ்டெப்ஸ்-ல்லாம் பலபேர் போட்டுகிட்டு இருக்காங்களே?

    பதில் : எல்லாருக்கும் அது ரொம்ப பிடிச்சி போச்சு. அந்த தீம் ல இன்னும் வேற வேற புது புது ஸ்டெப்ஸ் ல்லாம் எல்லாரும் பன்றாங்க. பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    கேள்வி : நீங்க அது போல வேற காஸ்ட்யூம்-ல வேற ஸ்டெப்ஸ் போடறதா ஐடியா இருக்கா?

    பதில் : இல்ல. இதுவே போதும், ஏற்கனவே நிறைய பண்ணியாச்சு.

    ஒரிஜினல பாத்துருக்கீங்களா?

    ஒரிஜினல பாத்துருக்கீங்களா?

    கேள்வி : நீங்க மைக்கேல் மதன காமராஜன் படம் பாத்துருக்கீங்களா?

    பதில் : கொஞ்சம் கொஞ்சம் சீன் பாத்துருக்கேன். இந்த பாட்டு முழுசாவே பாத்துருக்கேன்.

    கேள்வி : இத பாத்துட்டு குஷ்பு கிட்டருந்து பாராட்டு வந்துச்சா?

    பதில் : காத்துகிட்டு இருக்கேன். நிச்சயமா பார்த்துருப்பாங்கன்னு நெனக்கிறேன்.

    இதோ உங்களுக்காக

    கேள்வி : நிறைய காலேஜ் பசங்களுக்கெல்லாம் இந்த பாட்டு ரொம்பவே பிடிச்சி போச்சு. அவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க.

    பதில் : நிறையபேர் இந்த பாட்டுல, என்னோட டான்ஸ் மட்டும் பார்த்து ஷேர் பண்றாங்க. அது மாதிரி ஸ்டெப்ஸ் ல்லாம் போடுறாங்க. பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாருக்கும் நன்றிகள். தொடர்ந்து எனக்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு தரனும்ன்னு கேட்டுகிறேன்.என்று உற்சாகமாக சொல்லிமுடித்தார் டிக்கிலோனா புகழ் அனகா.மேலும் அனகா மற்றும் டிக்கிலோனா குழுவினரின் வீடியோக்களை பிலிம்பீட் தளத்தில் காணலாம்.

    English summary
    Dikkiloona Heroine Anagha Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X