தினமும் கிச்சடி.. பெரிய இயக்குநர் என ஷங்கரை நம்பி போனது என்னோட தப்பு தான்.. தில் ராஜு பகீர் பேட்டி!

ஹைதராபாத்: இதுவரை என்னோட வாழ்நாளில் 58 முதல் 60 படங்கள் செய்திருக்கிறேன். அனைத்தும் இளம் இயக்குநர்கள் கூடத்தான். முதல்முறையாக பெரிய இயக்குநர் என ஷங்கரை நம்பி கேம் சேஞ்சர் படம் பண்ண சென்றது என்னோட தப்பு தான். அதற்கான தண்டனையை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு மீடியா ஒன்றூக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

முன்னதாக கேம் சேஞ்சர் படத்தில் பணியாற்றிய எடிட்டர் ஷமீர் முகமது மொத்தம் நாலரை மணி நேரம் ஃபூட்டேஜை வைத்துக் கொண்டு படத்தை எடிட் செய்ய ஷங்கர் சொன்னார் என்றும் கொஞ்சம் கூட புரொஃபஷனலிஷமே அவரிடம் இல்லை என பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Dil Raju opens up about how he made mistake to bring Shankar in Ram Charan s Game Changer
Photo Credit:

அதுதொடர்பான கேள்வியை தொகுப்பாளர் தில் ராஜுவிடம் எழுப்ப, அவரும் தனது மனதில் இருந்த பாரத்தை மொத்தமாக இறக்கி வைத்து விட்டார். கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் அந்த பட்த்தை ஷங்கர் போன்ற பெரிய இயக்குநரை நம்பி கொடுத்து தவறு செய்த என்மீது தான் விழ வேண்டும் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.

ராம்சரண் பாவம்: ராஜமெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் போல ஒரு படத்தைக் கொடுத்த ராம் சரணுக்கு அதே போல பெரிய வெற்றிப் படம் கிடைக்கும் என்று நம்பியே அவர் இந்த கேம் சேஞ்சர் படத்தில் இணைந்தார். ராம் சரணுக்கு பெரிய வெற்றியோ அங்கீகாரமோ கிடைக்காதது எனக்கு ரொம்பவே மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் ரொம்பவே இந்த படத்துக்காக பொறுமை காத்தார் என தில் ராஜு பேசியுள்ளார்.

தினமும் கிச்சடி: ஷூட்டிங் ஸ்பாட்டில் படப்பிடிப்பு நடக்காமல் தினமும் கிச்சடி தான் கிண்டிக் கொண்டிருப்பார். தேவையற்ற செலவுகள் மற்றும் சரியான திட்டமிடல் இல்லாதது தான் படத்தின் படுதோல்விக்கு காரணம் எனக் கூறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளராக நான் தான் சரியான கான்ட்ராக்ட் போட்டிருக்க வேண்டும், படம் தவறான பாதையில் பயணிக்கும் போதே அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், என்னால் எதையும் செய்ய முடியாத சூழலுக்கு நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தில் ராஜு ஓபனாக போட்டு உடைத்திருக்கிறார்.

Dil Raju opens up about how he made mistake to bring Shankar in Ram Charan s Game Changer
Photo Credit:

பெரிய இயக்குநரை நம்பி தவறு செய்தேன்: என் வாழ்க்கையில் இதுவரை 58 முதல் 60 படங்கள் வரை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். பெரும்பாலும், பெரிய இயக்குநர்களை நம்பி படம் பண்ண போனது கிடையாது. ஷங்கர் ஒரு பெரிய இயக்குநர் என அவரை நம்பி படம் எடுக்க போனது தான் என்னுடைய முதல் தவறு, அதை ஒத்துக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க போக வேண்டியது தான் தில் ராஜு அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

ஷங்கரை திட்டும் ரசிகர்கள்: ராம் சரண் ரசிசிகர்களும் தெலுங்கு சினிமா ரசிகர்களும் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தை கெடுத்து விட்டார் என்றும் தயாரிப்பாளர்களின் பணத்தை எல்லாம் திறம்பட கையாள தெரியாத இயக்குநர் என்று கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர்ந்து ஷங்கர் இயக்கும் படங்கள் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டது மட்டுமின்றி படுதோல்வியை சந்தித்த நிலையில், அவரது ட்ரீம் புராஜெக்ட்டான வேள்பாரி படம் இப்போதைக்கு வர வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X