வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்துவிட்டார் விஜய்.. திரிஷாவால் நடுத்தெருவிற்கு வருவார்!
சென்னை: தவெக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நடிகை ஒருவர் மீது சங்கீதா கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த நிலையில், நேற்று விஜய், திரிஷா ஜோடியாக திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலம் அளித்திருக்கும் பேட்டியில் விஜயின் இமேஜ் திரிஷாவால் சரிந்துவிட்டது என்றார்.
விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த வாரம் செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், என் கணவருக்கு நடிகை ஒருவருடன் தொடர்பு உள்ளது. அந்த நடிகை என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன் என சங்கீதா மனுவில் கூறியிருந்தார்.

ஜோடியாக ஒரே காரில்: சங்கீதா நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், இணையத்தில் அந்த நடிகை திரிஷா தான் என செய்திகள் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் நேரத்தில், நேற்று கல்பாத்தி சுரேஷின் மகன் திருமணத்திற்கு விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக ஒரே காரில், ஒரே நிற உடை அணிந்து வந்து மேடையில் ஒன்றாகவே போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதுகுறித்து, Public Wing யூடியூப் சேனலுக்கு சினிமா பிரபலம் திண்டுக்கல் வெங்கடேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில், சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்த போதுகூட, இது அரசியல் கட்சியின் சதி எனத்தான் அவரது நலன் விரும்பிகள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
நடுத்தெருவிற்கு வருவார்: ஆனால், நேற்று விஜய்,திரிஷா இருவரும் ஒரே காரில் ஒன்றாக வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார். எதுவாக இருந்தாலும் விஜய் இப்படி செய்து இருக்கக்கூடாது, விஜய் பற்றி பல விமர்சனங்கள் வந்த போதும், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால், இப்போது நிலைமை வேறாக மாறிவிட்டது. விஜய் பெண்களின் வாக்குகளை இதன் மூலம் இழந்துவிடுவார். வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்துவிட்டார் விஜய், இதனால் அவரின் இமேஜ் சரிந்துவிட்டது. இருவரை பற்றியும் இணையத்தில் செய்தி பரவி வரும் இந்த நேரத்தில், திரிஷாவும் இதை தவிர்த்து இருக்க வேண்டும். திரிஷா விஜய்யை நடுத்தெருவிற்கு கொண்டு வருவார். இந்த நேரத்தில் விஜய் சுதாரித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவரின் மதிப்பு மிகவும் குறைந்துவிடும் என வெங்கடேஷ் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











