twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனது பயோபிக் படத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் பிரபல தாதா முத்தப்ப ராய்.. இயக்குனர் தகவல்!

    By
    |

    சென்னை: மறைந்த பிரபல நிழல் உலக தாதா முத்தப்ப ராய் தனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அதிக ஆர்வம் காட்டினார் என்று பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரைச் சேர்ந்தவர் முத்தப்ப ராய். பிரபல தாதாவான இவர், பெங்களூருவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

    1980 மற்றும் 90 களில் மிரட்டல் தாதாவாக இருந்த இவர், கொலை, கட்டப் பஞ்சாயத்து, ஆட்கடத்தல் என அத்தனை சமூக விரோத செயல்களில் தன்னை ஈடுபடுத்தியவர்.

    முன்னாள் தாதா..சினிமா தயாரிப்பாளர்.. முத்தப்பா ராய் பெங்களூரில் மரணம்.. புற்றுநோயால் உயிர்பிரிந்தது!முன்னாள் தாதா..சினிமா தயாரிப்பாளர்.. முத்தப்பா ராய் பெங்களூரில் மரணம்.. புற்றுநோயால் உயிர்பிரிந்தது!

    உயிருக்கு ஆபத்து

    உயிருக்கு ஆபத்து

    90 களின் தொடக்கத்தில் நடந்த தாதாக்கள் மோதலில் முத்தப்ப ராயை கொல்ல, ஒரு கும்பல் திட்டம் தீட்டியது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பலத்த காயம் அடைந்த முத்தப்ப ராய். குண்டு காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்று நினைத்து, பெங்களூரை காலி செய்துவிட்டு, துபாய்க்குத் தப்பினார்.

    புற்றுநோய் சிகிச்சை

    புற்றுநோய் சிகிச்சை

    அங்கு பிரபல தொழிலதிபர் ஆனார். மருந்து பிசினஸில் கொடிகட்டிப் பறந்த அவர், கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார். இந்த வழக்குகளில் இருந்து மீண்ட இவர், பின்னர் 'ஆம் ஜெய கர்நாடகா' என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
    அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததை அடுத்து, கடந்த சில வருடங்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.

    சினிமா ஆர்வம்

    சினிமா ஆர்வம்

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது முதல் மனைவி ரேகா ராய், 2013ம் ஆண்டு இறந்துவிட்டார். 2018 ஆம் ஆண்டு அனுராதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், முத்தப்ப ராய் சினிமா ஆர்வம் கொண்டவர். பல படங்களுக்கு பைனான்ஸ் செய்திருந்தாலும் நேரடியாக படம் ஏதும் தயாரிக்கவில்லை என்கிறார்கள்.

    தயாரிக்கவில்லை

    தயாரிக்கவில்லை

    பைனான்ஸ் செய்திருப்பதால் பல கன்னட படங்களில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் முத்தப்ப ராய் தனது வாழ்க்கையை படமாக்க நினைத்திருந்தார். இதை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. படத்துக்கு ராய் என்று டைட்டிலும் வைத்தனர். விவேக் ஓபராய், முத்தப்ப ராயாக நடிப்பதாக இருந்தது.

    ஏ.எம்.ஆர்.ரமேஷ்

    ஏ.எம்.ஆர்.ரமேஷ்

    கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் பின்னர் தொடங்கப்படவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் இந்த பயோபிக்கை தன்னை இயக்கும்படி முத்தப்ப ராய் சொன்னதாக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் நம்மிடம் தெரிவித்தார்.

    ராஜீவ் கொலை

    ராஜீவ் கொலை

    இவர், ரவிகாளே, மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடித்த குப்பி, காவலர் குடியிருப்பு, அர்ஜூன், கிஷோர் நடித்த வனயுத்தம், அர்ஜூன், ஷாம், மனிஷா கொய்ராலா நடித்த ஒரு மெல்லிய கோடு உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். அடுத்து ராஜீவ் காந்தி கொலை சம்பவ விசாரணையை பின்னணியாக வைத்து படம் இயக்கும் வேலைகளில் இருக்கிறார்.

    என்னிடம் கேட்டார்

    என்னிடம் கேட்டார்

    அவரிடம் கேட்டபோது, 'முத்தப்ப ராய்க்கு தனது வாழ்க்கை கதையை படமாக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. இதுபற்றி என்னிடம் பேசி இருக்கிறார். நான் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் படங்களை எடுத்து வருவதால், என்னிடம் முதலில் கேட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன், அவர் கேட்டபோது, நான் முடிவை உடனடியாகச் சொல்லவில்லை.

    ராம் கோபால் வர்மா

    ராம் கோபால் வர்மா

    நான் இயக்கவில்லை என்றால் ராம் கோபால் வர்மா, தனது பயோபிக்கை இயக்க வேண்டும் என்று விரும்பினார். அதில் ஆர்வமாகவும் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் வேறு படங்களை இயக்கப் போகிறேன், இதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் சொல்லிவிட்டேன். பிறகு அவர் ராம்கோபால் வர்மாவிடம் பேசி, அந்தப் படம் தொடங்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்த படத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை' என்று தெரிவித்தார்.

    English summary
    Director A.M.R.Ramesh talks about Don Muthappa Rai's biopic
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X