ஆளப்போறான் தமிழன்.. ஆஸ்திரேலியா சினிமாவை கலக்கும் அலன் ஆறுமுகம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
சென்னை: ஆஸ்திரேலியா சினிமா உலகை கலக்கிக் கொண்டிருக்கும் தமிழன் இயக்குநர் இளந்திரையன் அலன் ஆறுமுகம் கொடுத்துள்ள எக்ஸ்க்ளூசிவ்வான பேட்டி இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளது.
Recommended Video
இலங்கையில் உள்ள பட்டிகோலாவில் 1978ம் ஆண்டு பிறந்த அலன் ஆறுமுகம், இப்போ ஆஸ்திரேலியாவில் வரிசையாக பல படங்களை இயக்கும் பணிகளில் கலக்கி வருகிறார்.
Aiyai, ஆர்க் 13, நைன் நைட்ஸ் மற்றும் அப்சு என ஏகப்பட்ட படங்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அய்யய் எனும் பேய் படம் ஷூட்டிங் முடிந்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.
ஆர்க் 13 படம் பிரம்மாண்டமான முறையில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கி வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு நடிகர்களை ஒரு தமிழர் வேலை வாங்கி வருவதே பெருமையான விஷயம் தான்.
இந்த பேட்டியில், திரைக்கதைக்கு தான் கொடுக்கும் அதிக முக்கியத்துவம் மற்றும், பட்ஜெட்டை தேவையானவற்றுக்கு திட்டமிட்டு செலவிட்டால் நல்ல குவாலிட்டியான படங்களை எந்த மொழியில் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றார்.
புரடக்ஷன் கம்பெனி ஆரம்பித்து சினிமா பணிகளை கவனிப்பது பற்றியும், லைட் மேனுக்கும், இயக்குநருக்கும் ஆஸ்திரேலியாவில் ஒரே சம்பளம் தான் என ஏகப்பட்ட தகவல்களை கூறியுள்ள அலன் ஆறுமுகத்தின் பேட்டிகளை கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











