சென்சார் போர்ட்ல கண்டிப்பா அரசியல் இருக்கு.. ஜெயிலர் படத்துக்கு யு/ஏ எப்படி? அமீர் கேள்வி!
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவுக்கு பூதாகரமாக சென்றது. ஆனால், அப்படி வழக்கு தொடர்ந்தாலும் சுத்த மட்டுமே விடுவாங்க என்றும் உரிய தீர்வு கிடைக்காது என வழக்கையும் படக்குழு வாபஸ் வாங்கியது.
சமீபத்தில், மெளனம் பேசியதே படத்தை ரீ ரிலீஸ் செய்த இயக்குநர் அமீர் அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் சென்சார் போர்ட் குறித்த கேள்விக்கு, கண்டிப்பாக சென்சார் போர்ட்ல அரசியல் இருக்கு என பேசி அதற்கு விளக்கமும் கொடுத்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

துரந்தர் போன்ற படங்களுக்கு எளிதில் தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடுகிறது என்றும் ஜன நாயகன் படத்துக்கு ஏன் தரவில்லை என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தணிக்கை வாரியம் என்ற ஒன்றே தேவையில்லை என பேசிய நிலையில், இயக்குநர் அமீரும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
சென்சார் போர்ட்ல அரசியல் இருக்கு: காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி, துரந்தர் போன்ற படங்களுக்கு தாராளமாக சென்சார் சான்றிதழை வழங்கி விடுகின்றனர். ஆனால், மத்திய அரசுக்கு ஒத்துப் போகாத படங்களுக்கு மட்டுமே சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக பரவலான பேச்சுக்கள் மற்றும் கண்டனங்கள் கிளம்பி வரும் நிலையில், சென்சார் போர்டில் அரசியல் இருப்பது உண்மை தான் என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

ரவி மோகன் படத்துக்கு ஏ சான்றிதழ்: ரவி மோகனை வைத்து நான் இயக்கிய ஆதி பகவன் படத்தில் பெரிதாக ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோ, படுக்கையறை காட்சிகளோ இல்லை. ஆனால், அந்த படத்துக்கு எதற்கு ஏ சான்றிதழ் கொடுத்தீங்க, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்துக்கு எப்படி யு/ஏ சான்றிதழ் கிடைத்தது என அமீர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜெயிலர் படத்துக்கு எப்படி?: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லன் விநாயகன் ஒருத்தரை போட்டு சுத்தியலில் அந்த அடி அடித்து ரத்தம் தெறிக்க தெறிக்க கொலை செய்வார். மேலும், ஆசிட் டப்பில் முக்கி கொலை செய்யும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். ரஜினிகாந்த் வேற எந்த படத்திலும் செய்யாத வகையில் ஒருத்தரின் தலையை ஒரே சீவாக சீவி தள்ளுவார். ஆனால், அந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என தனது ஆதங்கத்தை அமீர் வெளிப்படுத்தினார். சூர்யாவுடனான மனக்கசப்பும் மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் மூலம் தீர்ந்த நிலையில், கூடிய விரைவில் இருவரும் இணைந்து வாடிவாசல் படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











