twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட் பண்ணா ஃபாரின்ல சாங்- இதெல்லாம் இப்ப யாரும் விரும்பறது இல்ல... ஆனந்த் சங்கரின் எதார்த்த உண்மைகள்

    |

    சென்னை : ஏழாம் அறிவு படத்தின் உதவி இயக்குனராக, துப்பாக்கி படத்தின் இணை இயக்குனராக, அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குனாராகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் இயக்குனர் ஆனந்த் சங்கர்

    இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய இவரின் அடுத்த படைப்பாக தீபாவளி ரிலீஸாக வருவது எனிமி. முதல் நாள் முதல் ஷோ அண்ணாத்த படத்திற்குதான் செல்லப்போவதாக சொல்லியிருக்கிறார்.

    எனிமி இயக்குனரே "முதலில் அண்ணாத்தவ பாருங்க, அப்பறமா எனிமி செகண்ட் ஷோ-வுக்கு போகலாம்"ன்னு அண்ணாத்த-விற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பரபரப்பான விஷயங்களை நம்மோடு பகிர்கிறார் ஆனந்த் சங்கர்

    ரஜினி வீட்டுக்கு வந்தப்பவும் வாசாமி-ன்னு தான் சொன்னாங்க... எழுத்துலக தம்பதிகள் அருண்பாரதி-பத்மாவதிரஜினி வீட்டுக்கு வந்தப்பவும் வாசாமி-ன்னு தான் சொன்னாங்க... எழுத்துலக தம்பதிகள் அருண்பாரதி-பத்மாவதி

    சிங்கப்பூரில் எனிமி

    சிங்கப்பூரில் எனிமி

    கேள்வி : எனிமி படத்தோட வெளிநாட்டு ஷூட் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.

    பதில் : வெளி நாட்டுல பட ஷூட்டிங் வேணும்,. ஆனா அது தமிழ் படமா இருக்குனும். அப்படி இருக்கப்ப, அங்க இருக்க சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பத்தி காட்டுறோம்ன்னா, அது ஜனரஞ்சகமா இருக்கும். எடுபடும். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள பத்தி இந்த படத்துல காட்டிருக்கோம். ஆனா முழுசா அத மட்டுமே வச்சி காட்டல. இது ஒரு கமர்ஷியல் படம் அவ்வளவுதான். அதுமட்டும் இல்லாம, இந்த லாக்டவுன்,கோவிட்ன்னால நிறைய நாள் அங்க ஷுட் பண்ண முடியல. துபாய் போன்ற வேற இடங்கள் ல எடுத்து மேட்ச் பண்ணிருக்கு. அப்ப இருந்த சூழ்னிலைக்கு ஷூட்டிங் போறதே பெரிய விஷயம் .

    செம பஞ்ச் இருக்கு

    செம பஞ்ச் இருக்கு

    கேள்வி : இந்த படத்துல மக்கள் மனசுல நிக்க போற வசனங்கள் ஒரு சிலது சொல்லுங்களேன்.

    பதில் : "உலகத்துலயே ஆபத்தான எதிரி யார் தெரியுமா? உன்னபத்தி எல்லாமும் தெரிஞ்ச உன் நண்பன் தான்" -ன்னு ஒரு டயலாக் டீசர் ல வரும். அதுவே 15 மில்லியன் க்கு மேல ரீச் ஆகிருக்கு. அது போல படத்துலயும் அங்கங்க இருக்கு. "தோத்தாலும் பரிசு கிடைக்கும்ன்னா, ஜெயிக்கனும்ங்கிற வெறி போயிடும். உன்னோட பரிச, நீதான் ஜெயிச்சி வாங்கனும்" - இதுபோல நிறைய வசனங்கள் ல்லாம் ரொம்பவே பேசப்படும்.

    கிளாமர்ல்லாம் இல்ல

    கிளாமர்ல்லாம் இல்ல

    கேள்வி : இந்த படத்துல மிர்னாலினி கேரக்டர் என்ன?

    பதில் : சிங்கப்பூர்ல மெடிசன் படிக்கிற ஸ்டூடண்ட் கேரக்டர். அந்த ஊர்ல இருக்க ஒரு இந்திய பெண்மணி, ஒரு கேஷ்வலான ஜாலியான கேரக்டர். ரொம்ப க்ளாமரால்லாம் காட்டல. ஒரு நேச்சுரலான கேரக்டராதான் நடிச்சிருப்பாங்க.

    பேசப்போகும் க்ளைமேக்ஸ்

    பேசப்போகும் க்ளைமேக்ஸ்

    கேள்வி : இந்த படத்தோட க்ளைமேக்ஸ் சீன் -க்கு ரொம்ப ஒர்க் பண்ணிருக்கீங்களாமே

    பதில் : இருமுகன் படத்துல சின்னதா ஒரு டெஸ்ட் மட்டும் பண்ணேன். "கண்ணை விட்டு கன்னம்பட்டு" பாட்டுல, நிறைய சிஜி ஒர்க்ஸ், விஷ்வல் எபக்ட் எல்லாமே இருக்கும். அதுவும் ஒர்க்கவுட் ஆச்சு. இந்த பட க்ளைமேக்ஸ் ல ப்ளான் பண்ணி பக்காவா ரொம்ப சிரத்தை எடுத்து ஒர்க்கவுட் பண்ணிருக்கோம்.

    இந்த படத்தோட க்ளைமேக்ஸ்-க்கு. இப்ப சாதாரணமா ஒரு ஸ்டீல் பேக்டரில பைட் சீன்னா, ஒரு மாஸ்டர கூப்பிட்டு எடுத்துகுடுங்கன்னா முடிஞ்சிடும். ஆனா இது அதுமாதிரி இல்ல 360 டிகிரில ஒரு சீன் முழுக்க சிஜி ஒர்க்ன்னா அதுக்கான மெனக்கடல், பயிற்சி எல்லாமே இருக்கும். அது எல்லாமே இந்த படத்தோட க்ளைமேக்ஸ்க்கு பண்ணிருக்கோம். தியேட்டர்ல பெரிய திரையில பாக்கும் போது, நிச்சயமா பேசப்படும்.

    கட் பண்ணா பாரின்ல சாங்

    கட் பண்ணா பாரின்ல சாங்

    கேள்வி : சினிமாவுக்கு பாட்டுங்கிறது அவ்வளவு முக்கியமா ?

    பதில் : தேவைப்படும் பட்சத்தில் பாட்டு இருக்குறதுல தப்பில்ல. பாட்டே இல்லாம படம் கூட வந்துருக்கு. ஆனா பாட்டும் இருக்கலாம் தப்பில்ல. இந்த எனிமி படத்துலயே ஒரு நிச்சயதார்த்த பாட்டு, சிங்கப்பூர் தமிழர்கள் பத்தி காட்டும்போது ஒரு பாட்டுன்னு இருக்கு. அத கட் பண்ணினாலும் தனியா தெரியாது. அதே நேரத்துல, இப்ப உள்ள மக்கள் ரசனையில, கட் பண்ண ஃபாரிந்ல சாங்-ல்லாம் இப்ப அவ்வளவா விரும்பறது இல்ல. அதுக்காக பாட்டே வேண்டாம்ன்னு சொல்ல முடியாது. தேவைப்படும் இடத்துல நிச்சயமா பாட்டு இருக்கலாம் தப்பில்லை என்று பல நிதர்சன உண்மைகளை ஜாலியாக வும் கேஷ்வலாகவும் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் ஆனந்த் சங்கர். வீடியோவாக பிலிமிபீட் தமிழ் யூட்யூப் தளத்தில் விரிவாக காணலாம்.

    English summary
    Anand Shankar Exclusive Interview: எனிமி இயக்குனரே “முதலில் அண்ணாத்தவ பாருங்க, அப்பறமா எனிமி செகண்ட் ஷோ-வுக்கு போகலாம்”ன்னு அண்ணாத்த-விற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பரபரப்பான விஷயங்களை நம்மோடு பகிர்கிறார் ஆனந்த் சங்கர்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X