ஒரு வேளை சாப்பாடு கிடைக்கல.. தெருவுல நின்னு கெட்ட வார்த்தை பேசுவேன்.. செல்வராகவன் பேட்டி!
சென்னை: கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகன், தனது தம்பி தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை என்ற படத்தை கொடுத்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து வருகிறார். இயக்குநராக இருந்த இவர், பீஸ்ட் படத்தில் நடித்த பிறகு, தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர் மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார்.
கேள்வி: தீ, இசை, இரவு மீது அப்படி என்ன உங்களுக்கு காதல்?
பதில்: எனக்கு அதுபோன்ற கதைகள் வருகிறது என்று நான் நினைக்கிறேன். இசையின் மீது எனக்கு அபாரமான காதல், அதேபோல இரவும் அதிகமாக வரும், அது எதற்காக வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. இதை நான் வேண்டுமென்றே எழுதுவதில்லை. ஆனால், அது தனாகவே அமைந்து விடுகிறது. அதை பார்த்த பாலர், இதுதான் என்னுடைய பிராண்ட் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். செல்வா ஸ்டைல் என்று எதுவுமே இல்லை, அது எதார்த்தமாக நடக்கிறது.
எப்போதும் வேலையின் மீது ஈடுபாடு இருந்தால், அது சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைப்பவன் நான். ஒரு வேலை செய்து கொண்டு இருப்பேன் நேரம் போனதே தெரியாது இரவு ஆகிவிடும். இதனால் தான், ஆபீஸ் போகிற வேலை எல்லாம் எனக்கு செட் ஆகாது என்று இன்ஜினியரிங் படிக்கும் போதே தெரிந்துவிட்டது. என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் பெரிய இன்ஜினியர் ஆக முடியாது என்பதை தெரிந்து கொண்டதால், எனக்கு என்ன வரும் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளில் ஈடுபட்டேன். கடைசியில் எனக்கு தெரியாமலேயே தான் நான் இயக்குனராக மாறினேன்.

கேள்வி: காதல் கொண்டேன் படம் எப்படி உருவானது?
பதில்: சிறுவயதிலிருந்தே கதை எழுதும் பழக்கம் இருந்தது. ஆனால், கதை எழுதுவேன் அதை யாரிடமும் சொல்ல மாட்டேன், காட்டவும் மாட்டேன். அப்படி என்னுடைய 17வது வயதில் உருவானது தான் காதல் கொண்டேன் திரைப்படம். ஒரு தோழியின் மீது ஒரு ஆண் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறான். அவர்கள் நட்பாக தான் பழகுகிற போது, இடையில் காதலன் என்று ஒருவன் வரும்போது ஒட்டுமொத்த உலகமும் அந்த இளைஞனுக்கு இருண்டு போய்விடுகிறது. ஆனால், அந்த இளைஞன், எப்படியாவது என்னுடைய காதலை இவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, அவளை காட்டில் கடத்தி வைக்கிறான். அதுதான் காதல் கொண்டேன் திரைப்படம். அதில் தவறாகவோ, தவறான எண்ணமோ எதுவுமே இல்லை. அவனது அன்பை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இருந்தது.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அந்தப் பெண் பின் பலமுறை சுற்றி இருக்கிறேன். ஆனால், ஒன்றும் தேறியபடி இல்லை. ஆனால், என் மனதில் ஒரு நல்ல பெண்ணை மிஸ் செய்கிறோம் என்ற தவிப்பு இருந்தது. அந்த நேரம், நானும் அவளும் தனியாக இருக்கும் ஒரு சந்தர்ப்பம் வராதா என்று என் மனதில் ஏற்பட்ட தவிப்பு தான் காதல் கொண்டேன் படத்தின் கதை.

கேள்வி: சிறு வயதில் நீங்கள் தவிப்பு, ஏக்கம், அழுகை, இயலாமை போன்றவற்றால் தவித்தீர்களா?
பதில்: ஊரிலிருந்து பிழைப்பிற்காக சென்னை வந்தபோது, மிகவும் கஷ்டப்பட்டோம் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் இருந்தோம். அம்மா, பக்கத்துவீட்டில், டிரசுக்கு போட கஞ்சி வேண்டும் என வாங்கி வருவார்கள். அதைத் தான் நான் குடித்து வளர்ந்தேன். நானும் என்னுடைய தங்கையும் மிகவும் கஷ்டங்களை கடந்து வந்தோம். ஆனால், இந்த வறுமையே பார்க்காமல் வளர்ந்தவர் தனுஷ். தனுஷ் பிறக்கும்போதெல்லாம் அப்பாவிற்கு ஓரளவு வருமானம் வரத் தொடங்கிவிட்டது. அதன் பிறகு உதவிய இயக்குநரான, பிறகு ஓர் அளவிற்கு எங்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைத்தது. எங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வர அப்பா பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லவே முடியாது. கிடைத்த வேலைகளை செய்து ஐந்து பேரையும் பட்டினி போடாமல் பார்த்துக் கொண்டார். தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் தான் புது துணியே கிடைக்கும்.
தி நகர் கண்ணம்மாபேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தான், நாங்கள் வசித்து வந்தோம். அந்த தெருவில் எப்பொழுதுமே பிணங்கள் போய்க்கொண்டே இருக்கும். அந்த பிணவாடையோடு தான் நாங்கள் வளர்ந்தோம். அப்போது, சேற்றில் நான் உருட்டி புரட்டி, கோலி விளையாடுவேன், கெட்ட வார்த்தை சரளமாக பேசுவேன். இதை அப்பா ஒரு நாள் பார்த்துவிட்டார். அதன் பிறகு,இந்த இடத்திலேயே இருந்தால், கெட்டு விடுவான் என்று மிகவும் கஷ்டப்பட்டு கே கே நகரில் ஒரு இடத்திற்கு வந்தோம். அப்போது என் மனதில் வந்த காதல் தான், 7ஜி ரெயின்போ காலனி. அதில் சில கற்பனைகளை கலந்து கொடுத்தேன்.

பதில்: எதார்த்தமான வாழ்க்கை இப்படித்தான் ராவாக இருக்கும், யாருக்கும் வாழ்க்கை பூச்செண்டோடு அமைவதில்லை. சென்னை போன்ற நகரத்தில் எத்தனை பேர் வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். இதில் இருக்கும் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை க்ரிட்டிக்காகத்தான் இருக்கும். நல்ல பள்ளி, நல்ல கல்லூரியில் தான் படித்தேன். ஆனால், எனக்குள் எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை தான் இருக்கும். இதனால், கடைசி பென்ச்சில் அமர்ந்து கொண்டு, அனைவரையும் பார்த்துக்கொண்டு இருப்பேன். அதே போல பெண்களும் நல்லா படிப்பவர்களைத்தான் பார்ப்பார்கள். இதனால், அவர்களை பார்த்து ஏக்கத்துடனேயே என் படிப்பு போச்சு.
தற்போது செல்வராகன் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக 50 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. முதல் பாகம் கதிரின் நினைவுகளோடு முடிந்த நிலையில், வாழ்க்கை 10 வருடத்திற்கு பின் கதிர் எப்படி இருக்கிறார் என்பதை சொல்லும் கதையாக . 7ஜி ரெயின்போ காலனி இருக்கும். 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 7ஜி ரெயின்போ காலனி படம் அப்போதே 90 திரையரங்குகளில் வெளியாகி 10 கோடி வசூலை அள்ளியது.


Click it and Unblock the Notifications











