எவ்ளோ தான் தாங்குறது.. தனிமை தான் சுகமே.. செல்வராவன் விரக்தியான பேச்சு!
சென்னை: இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடித்திருக்கும் திரைப்படம் "மனிதன் தெய்வமாகலாம்" இப்படம் ஏப்ரல் 10ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், குஷி ரவி நடிகை கெளசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக Behindwoods யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த செல்வராகவன் பல விஷயத்தை மனம் திறந்து பேசினார்.
அதில், பிரச்சனை என்னவாக இருந்தாலும், நம்முடைய பிரச்சனைகளுக்கு யாரும் ஆறுதலாக இருக்க மாட்டார்கள். நம்முடைய பிரச்சனைகளை அடுத்தவர்களிடம் சொன்னால் அவர்கள் அதை சுமையாக தான் பார்ப்பார்கள். நம்முடைய பிரச்சனைகளுக்கு அடுத்தவர்களிடம் ஆறுதல் நிச்சயமாக கிடைக்கவே கிடைக்காது. நண்பர்கள், உறவினர்கள் ஆயிரம் வார்த்தைகளை சொல்லலாம். ஆனால், நமக்கான ஆறுதல்கள் கிடைக்கவே கிடைக்காது. ஆறுதல் என்பது உங்களுக்கு ஆறுதல் கிடைத்தால் தானே அது ஆறுதல். அப்படி இருக்கும் போது எதற்கு வேஸ்டாக அடுத்தவர்களிடம் நாம் ஆறுதல் தேட வேண்டும். ஆறுதல் எப்பொழுது கிடைக்கும் என்றால் நம்மை நாம் ஆறுதல் படுத்திக் கொண்டால் மட்டும் தான் கிடைக்கும்.

தனிமையை விரும்புகிறேன்: இதனால்தான் என்னுடைய சோகத்திற்கு மருந்தாக யாருமே எனக்கு இல்லை. நான் யாரிடமும் ஆறுதல் தேடவில்லை. எப்பொழுதுமே நான் தனிமையில் இருப்பதைத்தான் விரும்புகிறேன். நான் தனிமையின் காதலன், தனிமை மட்டும்தான் சுகமே மத்ததல்லாம் இம்சைதான். இதுவரையிலும் நான் யாரிடமும் ஒரு அழகான காதலை உணர்ந்ததே இல்லை. ஒரு பெண் கடந்து போகும் போது மனசில் ஒரு பரிசம் தோன்றும் மற்றபடி வேறு எதுவும் இல்லை என செல்வராகன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
கீதாஞ்சலி: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை அமைத்துக்கொண்ட செல்வராகவன். காதல் கொண்டேன், '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' போன்ற அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த பின்.2011ம் ஆண்டு கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகனும் இருக்கின்றனர். அண்மையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, இன்ஸ்டாகிராமில் இருந்து செல்வராகவனின் போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











