உதிரிப்பூக்கள் என்னை கவர்ந்த படம்.. ரசித்து ரசித்து பார்த்தேன்.. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் !

சென்னை : மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படம் என்னை மிகவும் கவர்ந்த படம் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேர்காணலில் கூறியுள்ளார்.

1979ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் இன்று வரை ஈர்ப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் உயிரோட்டமான திரைக்கதைதான். புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதையை மையமாகக் வைத்து இப்படத்தை மிக சிறப்பாக அமைத்து இருப்பார் இயக்குனர் மகேந்திரன்.

Director AR Murugadoss interview

இப்படம் குறித்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில், உதிரிப்பூக்கள் என்னை கவர்ந்த படம், அந்த படத்தின் மைய கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரமான விஜயன் நடித்த சுந்தரவடிவேலு கதாபாத்திரத்தை குறிப்பிட்டு பல விஷயங்களை பகிர்ந்திருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் .

சுந்தரவடிவேலு கதாபாத்திரம் செய்யும் தீவினைகளையும் அதனால் பாதிக்கபடுவோர் மற்றும் சுந்தரவடிவேலு மனைவியின் தங்கை கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகள் என்று மொத்த படத்தை ஒரு டீகோட் செய்து அஃதாவது பிரித்து படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து பார்த்தேன். இந்த கதாபாத்திரங்களின் செயலும், அதில் நடித்த நடிகர்களும் என்னை ஆச்சரியபட வைத்து விட்டார்கள் என்று பகிர்ந்து இருந்தார் .

Director AR Murugadoss interview

உதிரிப்பூக்கள் பற்றி மேலும் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் வசனங்கள் கதையில் வரும் உறவுமுறைகள் அவை எடுக்கும் முடிவுகள் என்று பல விஷயங்கள் என்னை வெகுவாக பாதித்தது என்று கூறியிருக்கிறார் .

இதிகாச படங்களே அதிகமாய் வெளிவந்த நேரத்தில், மண்சார்ந்த கதையை கையில் எடுத்து கதையை சரியான பாதையில் செலுத்தி, கதைக்கு உயிரூட்டி அழகுணர்ச்சியுடன் இயக்கி மக்களுக்கு கொடுத்திருப்பார் இயக்குனர் மகேந்திரன்.

Director AR Murugadoss interview

மக்களை தாண்டி பல இளம் இயக்குனர்களுக்கும் பிடித்தமான படம் என்றால் உதிரிப்பூக்களை சொல்லலாம் ஏனெனில் ஒரு நேர்காணலில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசும் போதும், எனக்கு தமிழில் மிக பிடித்த படம் உதிரிப்பூக்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் படத்தில் வில்லன் கதாபாத்திரம் பேசும் கடைசி வசனத்தையும் நினைவு கூறி, இந்த வசனம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வசனம் என்றும் கூறினார் .

கிட்டதட்ட உதிரிப்பூக்கள் வெளியாகி 40வருடங்களுக்கு மேலாகிறது. மகேந்திரனின் சிறந்த படங்களில் ஒன்றாக உதிரிப்பூக்கள் படம் பார்க்கபட்டு இன்றளவும் இந்த படம் மக்களால் கொண்டாடப்பட்டு படமாக இருந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X