ஆர்யாவுக்கு நடிப்பின் மீது வெறி… நான் கடவுள் படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் பாலா!

சென்னை : வித்தியாசமான கதை... வித்தியாசமான கதாபாத்திரம்... என அனைத்திலும் வித்தியாசத்தை புகுத்தி அதில் வெற்றி பெறுபவர் இயக்குனர் பாலா.

தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடி தந்த படைப்பாளி இயக்குனர் பாலா. இவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசும்.

இயக்குனர் பாலா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நான் கடவுள் திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் பாலா

இயக்குனர் பாலா

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த பாலா, முதன்முறையாக சேது திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். விக்ரம், அபிதா நடித்த இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. காதலின் வலி, அதன் ஆழத்தையும் மிகவும் எதார்த்தமாக இந்த படத்தில் கூறி இருப்பார் பாலா. இப்படம் விக்ரமின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சூர்யாவின் திறமையான நடிப்பு

சூர்யாவின் திறமையான நடிப்பு

இதையடுத்து, நந்தா திரைப்படத்தை இயக்கினார். இதில், சூர்யா,லைலா ஆகியோர் நடித்திருந்தனர். அகதிகள் முகாம் பற்றியும் சீர்திருத்தப்பள்ளியில் வளர்ந்தவர்கள் பின்னாளில் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் இப்படம் விளக்கி இருக்கும். சூர்யா, ராஜ்கிரண் இவர்கள் இருவரின் திரை வாழ்க்கையில் என்றும் பேசக்கூடிய ஒரு திரைப்படமாக நந்தா உள்ளது.

விக்ரமிற்கு தேசிய விருது

விக்ரமிற்கு தேசிய விருது

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் பிதாமகன். இப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்திராத கதை அம்சத்தையும், கதாபாத்திரத்தையும் மிகவும் இயல்பாக காட்டி இருப்பார் பாலா. பிதாமகன் திரைப்படம் பாலாவின் பெயரை மேலும் உச்சிக்கு கொண்டு சென்றது. இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை வென்றார் விக்ரம்.

பரதேசி

பரதேசி

ஆர்யா நடித்த நான் கடவுள் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. பரதேசி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் கொடுமைகளை இப்படம் காட்சிப்படுத்தியது. பாலா கடைசியா விக்ரம் மகன் துருவை வைத்து அர்ஜூன்ரெட்டியின் ரீமேக்கை இயக்கினார். இறுதியில் வேறு இயக்குனரை வைத்து இப்படம் முடிக்கப்பட்டது.

நடிப்பின் மீது வெறி

நடிப்பின் மீது வெறி

இயக்குனர் பாலா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நான் கடவுள் திரைப்படம் குறித்து சுவாரசியமானத் தகவல் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் ஆர்யா ஒரு அகோரியாக நடித்திருப்பார். மேலும் அந்த திரைப்படத்தில் ஆர்யா ஒரு காட்சியில் தலைகீழாக யோகா சனம் செய்திருப்பார். அந்த தலைகீழ் யோகாவை முறையாக செய்ய குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். ஆனால், ஆர்யா அந்த யோகாவை வெறும் 6 நாட்களில் கற்றுக் கொண்டு வந்து விட்டார். நடிப்பின் மீது ஆர்யாவுக்கு அவ்வளவு வெறி என பாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X