மனோஜ் இறந்த பின் பாரதிராஜா நிலைமை... பார்க்கவே சங்கடமா இருக்கு.. கண் கலங்கும் சகோதரர்!

சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் உடல் பாரதிராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மனோஜின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜ், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மனோஜ் இறந்த பிறகு பாரதிராஜாவை தேற்றவே முடியவில்லை. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை கண்கலங்கி பேசி உள்ளார்,

மனோஜ் மாதிரி ஒரு பையனை பார்க்கவே முடியாது அவனுக்கு நடிப்பதில் விருப்பமே இல்ல, டைரக்ஷன் மேல விருப்பமா இருந்தான். இதனால், அமெரிக்காவுக்கு போயி படிச்சான். படிச்சிட்டு வந்து மணிரத்தினம் சார், சங்கர் சாரிடம் உதவி இயக்குனரா பணியாற்றினான். இன்னைக்கு உலகத்துல எந்த எந்த விஷயம் கரண்ட்ல இருக்கோ, அத்தனை விஷயமும் மனோஜுக்கு தெரியும், சினிமாவை பத்தி அனைத்தும் தெரியும். அவனும் என் பையனும் சேர்ந்தா எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கிட்டே இருப்பாங்க. என்னுடன் சில நிறைய விஷயங்களை மனோஜ் பேசுவாரு, அப்போதும் சினிமா தான் பற்றி நாங்க ரெண்டு பேரும் பேசிப்போம். அவனுக்கு மட்டும் நல்ல பெரிய ப்ராஜெக்ட் கிடைத்து இருந்தால், நிச்சயமா மனோஜ் ஜெயிச்சிருப்பான். அவன் யாரு என்பதை ப்ரூவ் பண்ணி இருப்பான். ஆனா அதுக்கு வாய்ப்பு கிடைக்காம போனது தான் னோஜுக்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.

Manoj Bharathiraja Jayaraj

மோசமான நிலைமை: அப்படி ஒரு நல்ல பையனுக்கு இறைவன் ஏன் இப்படி பண்ணாருன்னு தெரியல, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைக்கும் அவனுக்கா இந்த நிலைமை என்று நினைக்கும் போது தான் சங்கடமாக இருக்கிறது. மனோஜின் பிள்ளைகளைப் பற்றிய நினைத்து கவலைப்படுவதா, அவரின் மகள் மனைவியை பற்றிய நினைப்பதா, இல்லை அண்ணன் பாரதி ராஜாவை பற்றி நினைப்பதாக என்று எனக்கு தெரியாமல், கொலப்ஸ் ஆகி அப்படியே மைண்ட் ஃபுல்லா அப்செட் ஆகவே இருக்கிறது. இந்த மனுஷனுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. மனோஜ் இறந்த பிறகு பாரதிராஜாவுக்கு சில நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, வீட்டுக்கு வருபவர்களிடம் மனோஜ் பற்றி சொல்லி அழுகிறார். மாடியில் விட்டுவிட்டு வந்தால் அவராகவே கீழே வந்து உட்கார்ந்துகொண்டு மருமகளையும், பேத்திகளையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், அவரை நினைத்தால் ரொம்பவே வேதனையாக இருக்கிறது என ஜெயராஜ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X