மீட்டருக்கு மேல கூவனும்.. பா. ரஞ்சித்திற்கு விருது கிடைக்காததற்கு காரணம் இதுதானா? பிரபலம் தகவல்!
சென்னை: 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கான திரைப்பட விருதுகளை தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதில், 2021ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஆர்யா மற்றும் பசுபதிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்த படம் சிறந்த படமாகவோ அல்லது அந்த படத்தை இயக்கிய பா.ரஞ்சித்திற்கே விருது அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகின்றனவா என கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்து இயக்குநர் கௌதமன்
TNMedia Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சார்பாட்டா பரம்பரை படம் ஒரு நேர்த்தியான படைப்பு. அந்த படத்திற்கு நிச்சயம் பா ரஞ்சித்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது கொடுத்திருக்க வேண்டும். பாடாவதியான எத்தனையோ படைப்புகளுக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. சார்பாட்டா பரம்பரை படத்திற்கு பா.ரஞ்சித்திற்கு விருது கொடுத்திருந்தால், அது ஒரு நேர்மையானதாக இருந்திருக்கும்.

இயக்குநர் கௌதமன்: விருது வழங்காததற்கு காரணம் என்னவென்றால், ஆர்ம்ஸ்டர் கொலையை அவர் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்திருந்தார். அவர்களை யார் எதிர்த்தாலும், அதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறைந்தபட்சம் ரஞ்சித்திற்கு ஏன் விருது தரவில்லை என திருமாவளவன் கேள்வி எழுப்பி இருக்கலாம் அவரும் கேட்கவில்லை. மாரிசெல்வராஜ் உதயநிதி ஸ்டாலிலுடன் இருப்பதால் அவருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாரிசெல்வராஜ் விருதுக்கு தகுதியானவர் தான். ஆனால், அந்த விருது நேர்வழியில் வராமல், உறவு வழியாக, தங்களின் புகழ் பாடுபவர்களுக்கு வழங்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வா தற்போது தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டு இருப்பதால், பெரும்பாலான கலைஞர்களை திரட்டி ஒரு விழா நடத்தி அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். இதெல்லாம் ஒருவிதமான மனநோய் தான். அப்படி விழாவை நடத்தப்படுவதை பார்த்தால் அவர்களுக்கு ஒரு மன நிம்மதி ஏற்படும் மீண்டும் நாம் மகுடம் சூட போகிறோம் என்ற எண்ணம் வந்துவிடும். அதற்காகத்தான் தகுதியே இல்லை என்றாலும் மீட்டருக்கு மேல் யார் கூவுகிறார்களோ, குதித்து ஆடுகிற கூட்டம் இருக்கிறதோ அவர்களுக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்து 20% மட்டும் தான் உரிய படைப்பாளிடம் சென்று உள்ளது என வ கௌதமன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications