கரூரில் ஜன நாயகன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? 41 பேர் பலிக்கு அது தான் காரணமா? எச்.வினோத் பேட்டி!

சென்னை: முதல்வர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' வரும் வியாழக்கிழமை (ஜூலை 23) தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரியா மணி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்யின்மகளாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் எச். வினோத் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தன் மீது சுமத்தப்பட்ட மிக மோசமான பழிக்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அந்த நேரத்தில், இணையத்தில் ஒரு கொடூரமான வதந்தி பரவியது. அதாவது, 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு அங்கு நடத்தப்பட்டது தான் இந்த அசம்பாவிதத்திற்கு முழு காரணம் என்று எச். வினோத் மீது சிலர் பழி சுமத்தப்பட்டது.

Jana Nayagan Karur H vinod
Photo Credit:

எச் வினோத் பேட்டி: இதுகுறித்து பேட்டியில் பேசிய எச். வினோத், அந்த கரூர் துயர சம்பவம் நடந்தபோதே நான் இது குறித்து ஊடகங்களில் பேசி உண்மையை விளக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், தயாரிப்பு தரப்பில் இருந்து இப்போது பேசினால் இந்த பிரச்சனை மேலும் பெரியதாகிக் கொண்டே போகும், அதனால் வேண்டாம் என்று என்னைத் தடுத்துவிட்டார்கள். இப்போது நான் மிகவும் சிம்பிளாக ஒரு கேள்வி கேட்கிறேன். அந்த சம்பவம் நடந்த போது, நான் சென்னையில் இருந்தேனா, பெங்களூரில் இருந்தேனா, அல்லது கரூரில் இருந்தேனா என்பதை போலீஸாரால் வெறும் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிட முடியும். பத்திரிகையாளர்கள் நினைத்தால் ஒரு 15 மணி நேரத்தில் கண்டுபிடித்து விடலாம். என்னுடைய போன் லொகேஷன், என் வீட்டு சிசிடிவி கேமரா என அனைத்தையும் வைத்தே இதை ஈஸியாகக் கண்டுபிடித்து விடலாம்.

பெரிய தவறு: அப்படியே நான் கரூரில் படப்பிடிப்பு நடத்தினேன் என்று வைத்துக் கொண்டாலும், தற்போது 'ஜனநாயகன்' படம் லீக்காகி விட்டது. அதை பார்த்தாலே தெரிந்துவிடும் கரூரில் படப்பிடிப்பு நடந்ததா... இல்லையா என்று, அப்படி இருந்தும், என் மீது அந்தப் பொய்யான பழியைச் சொன்னவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், என்னுடைய மனைவியிடமே பல பேர் என்னம்மா.. உன் வீட்டுக்காரர் இப்படி எல்லாம் செய்து விட்டாரா?' கேட்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இது எங்கள் குடும்பத்தைப் பாதித்தது.

சத்தியமா செய்யல: சமுதாயத்தின் முக்கியமான தூணாக இருப்பதே பத்திரிகைதான் ஆனால், அந்த பத்திரிகையாளர்களே எதைப்பற்றியும் யோசிக்காமல், ஒரு பொய்யான செய்தியின் உண்மைத் தன்மை பற்றி ஆராயாமல் அப்படியே பரப்பி விட்டார்கள் என்றால், அது ஒட்டுமொத்தமாக இந்த சிஸ்டத்தையே பாதிக்கும். என்றாவது ஒரு நாள் அந்தப் பொய்யைப் பரப்பியவரை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக ஏன் இப்படிச் செய்தீர்கள்? கேட்பேன். ஏனென்றால் அவர் செய்தது மிகப்பெரிய தவறு, அவர் சொன்ன விஷயத்தை உண்மைத் தன்மை தெரியாமல் பல பேர் செய்தியாக வெளியிட்டது அதைவிடப் பெரிய தவறு. அப்படி ஒரு விஷயத்தை சத்தியமாக நான் செய்யவே இல்லை என்று எச். வினோத் அழுத்த பதிலளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X