twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மாவிடம் சொன்னதை செய்து காட்டி விட்டேன்.. இயக்குனர் ஹலிதா ஷமீம் நெகிழ்ச்சி !

    |

    சென்னை : சிறு வயதில் அம்மாவிடம் சொன்னதை செய்து காட்டிவிட்டேன் என்று இயக்குனர் ஹலிதா ஷமிம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

    எளிமையான கதை களங்களைக் கொண்டு அனைவரையும் ரசிக்க வைக்கும் திரைப்படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர்கள் மிக சிலரே இப்போதுள்ள இயக்குனர்களில் அதில் முக்கியமானவர் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

    சமீபத்தில் இவரின் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இவர் ஏலே மற்றும் மின்மினி போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

    ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா மாஸ்டர் திரைப்படம்? படத்தின் தயாரிப்பாளர் முக்கிய தகவல்!ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா மாஸ்டர் திரைப்படம்? படத்தின் தயாரிப்பாளர் முக்கிய தகவல்!

    எளிமையான கதைகளையும்

    எளிமையான கதைகளையும்

    தமிழ் சினிமாவில் பல்வேறு தரப்பினரையும் கவரக்கூடிய பல்வேறு வகையான திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதற்கான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பிரம்மாண்ட கதைகளையும், மாஸ் கதைகளையும் மற்றும் எளிமையான கதைகளையும் கொண்டு இன்றளவும் பல திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றது.

    காலத்தால் அழியாத

    காலத்தால் அழியாத

    கே.பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா போன்ற பல முன்னணி இயக்குனர்கள் எளிமையான கதை களங்களைக் கொண்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இன்றளவும் காலத்தால் அழியாத பல படங்களாக இருந்து வருகின்றன.

    பாராட்டுகளையும் விருதுகளையும்

    பாராட்டுகளையும் விருதுகளையும்

    அந்த வகையில் தமிழ் சினிமாவில் அவ்வப்போது எளிமையான கதைகளை கொண்டு வரும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதும் உண்டு அவ்வாறு சமீபத்தில் தமிழில் வெளியான சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து மொழிகளையும் ரசிக்க வைத்து பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வந்தது.

    படமாக்கிக் கொள்ளட்டும்

    படமாக்கிக் கொள்ளட்டும்

    சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியதாவது தான் சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தபோது நான்காம் வகுப்பு படிக்கும்போதே இரண்டிலிருந்து நான்கு பக்கம் வரை ஒரு கதையை எழுதி, அதை சென்னை செல்ல உள்ள தனது அம்மாவிடம் கொடுத்து இதை இயக்குனர் ஷங்கரிடம் கொடுங்கள் அவர் இந்த கதையை படமாக்கிக் கொள்ளட்டும் என கூறினாராம். மிகவும் சிறுமியாக இருந்த ஹலிதா சமீமிடம் எப்படி இதைச் சொல்லி புரிய வைப்பது எனத் தெரியாமல் குழம்பி வந்த ஹலிதாவின் தாயார் இவரின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு தொடர்ந்து இவருக்கு ஊக்கம் அளித்து வந்துள்ளார்.

    சிறுமியாக இருக்கும்போதே

    சிறுமியாக இருக்கும்போதே

    இவ்வாறு தனது தாயார் தனக்கு என்ன வரும் என தெரிந்து கொண்டு அதற்கு ஊக்கம் அளித்ததாலேயே நான் இன்று மின்மினி வரை எனது திரைப்படத்தை எடுத்து வந்துள்ளேன் என நெகிழ்ந்து கூறியுள்ளார். இவ்வாறு சிறுமியாக இருக்கும்போதே ஷங்கரிடம் கதையை கொடுக்கச் சொல்லி சொன்ன ஹலிதா சமீமின் சில்லுக் கருப்பட்டி மற்றும் மின்மினி திரைப்படங்களை சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வித்தியாசமான முயற்சி

    வித்தியாசமான முயற்சி

    சிறுவயதில் முளைத்த கதை எழுதும் ஆர்வத்தை தற்பொழுது திரையிலும் நிரூபித்துக் கொண்டிருக்கும் ஹலிதா ஷமீமின் சில்லுக்கருப்பட்டி வெற்றி பெற்ற நிலையில் இவரின் வித்தியாசமான முயற்சியில் உருவாகி வரும் மின்மினி திரைப்படம் தமிழ் திரைப்படத்துறையில் அனைவரிடத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Director Halitha Shameem has done what she told her mother
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X