பிக்பாஸ் வீட்டில் பெண்களால் தான் சண்டையே.. பிரபல இயக்குநர் அதிரடி பேட்டி.. என்ன சொல்றாரு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் பெண்களால் தான் சண்டையே என பிரபல இயக்குநர் பேசிய பேட்டி வைரலாகி வருகிறது.

Recommended Video

BIGG BOSS ல பொண்ணுங்களாலதான் சண்டையே | CLOSE CALL WITH DIRECTOR HEMANT MADHUKAR | FILMIBEAT TAMIL

பிக்பாஸ் முதல் சீசனில் இருந்தே பெண்களால் தான் பிரச்சனைகள் வெடித்து வருகின்றன.

ஆண் போட்டியாளர்கள் சிவனேன்னு இருந்துட்டு கொடுக்கிற டாஸ்க்கில் வெற்றி பெற்று விட்டு சென்று விடுகின்றனர்.

பெண்கள் தான் குழாய் சண்டைக்கு தயாராக உள்ளனர். இதனிடையே அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான சைலன்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் க்ளோஸ் கால் பேட்டியில் பிக்பாஸ் குறித்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும், அதில் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, நமிதா உள்ளிட்டோர் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பினர். நடிகை ஓவியாவையும் தொடர்ந்து டார்கெட் செய்து அவரை பைத்தியக்காரி டாஸ்க்கில் வீட்டை விட்டே வெளியேற்றினர்.

சர்வாதிகாரி டாஸ்க்

சர்வாதிகாரி டாஸ்க்

இரண்டாம் சீசனில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் சாதுவாக நடித்த ஐஸ்வர்யா தத்தாவை களமிறக்கி அவருக்கு சர்வாதிகாரி டாஸ்க் கொடுத்து, நடிகர் தாடி பாலாஜி மீது குப்பையெல்லாம் கொட்டி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பினர். மும்தாஜ், ஜனனி அய்யர், யாஷிகா ஆனந்த் எல்லாம் சேர்ந்து செய்த ஏகப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

வனிதா விஜயகுமார், மீரா மிதுன்

வனிதா விஜயகுமார், மீரா மிதுன்

பிக் பாஸ் தமிழ் சீசனிலேயே ரசிகர்களால் மறக்க முடியாத சீசன் என்றால் அது கடந்த சீசன் தான். நடிகை வனிதா விஜயகுமார், மீரா மிதுன், ஜாங்கிரி மதுமிதா, ஷெரின், லாஸ்லியா என ஏகப்பட்ட பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். வனிதா விஜயகுமார் மற்றும் மீரா மிதுன் கிளப்பிய சர்ச்சைகள் எல்லாம் மீன் மார்க்கெட், குழாயடி சண்டைகள் எல்லாம் தோற்று போகும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனிதாவா சுரேஷா

அனிதாவா சுரேஷா

இந்த சீசனில் சனம் ஷெட்டி, சம்யுக்தா, ரேகா எல்லாம் நல்லா சண்டை போடுவார்கள் என்று பார்த்தால், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையே தான் சூப்பரான சண்டை ஆரம்பித்து இருக்கிறது. இந்நிலையில், நிசப்தம் படத்தின் இயக்குநர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ள க்ளோஸ் கால் பேட்டி வைரலாகி வருகிறது.

பெண்களால் தான் சண்டையே

பொதுவா ஆண்களை ஒரு வீட்டில் விட்டால், சில நாட்கள் சினிமா உள்ளிட்ட சகஜமான விஷயங்களை பேசுவார்கள், ஒரு வாரத்திற்கும் மேல் ஆனால் தான் சண்டை வரும், ஆனால், பெண்களை அந்த வீட்டில் விட்டால் உடனடியாக சண்டை வரும். நான் பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் அதிகம் பார்ப்பது இல்லை அது ஒரு பொழுது போக்கு ஷோ மட்டுமே எனக் கூறியுள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X