பிரபல இயக்குநர் என் மீது தேங்காயை வீசினார்: டாப்ஸி பரபரப்பு பேட்டி
மும்பை: தென்னிந்திய பட இயக்குநர் ஒருவர் தன் மீது தேங்காயை வீசியதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் செட்டில் ஆகும் முன்பு டாப்ஸி தென்னிந்திய படங்களில் தான் நடித்தார். தனுஷின் ஆடுகளம் மூலம் கோலிவுட் வந்த டாப்ஸி வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

தேங்காய்
தென்னிந்திய மொழி படம் ஒன்றில் நடித்தபோது இயக்குநர் என் மீது தேங்காயை தூக்கி வீசினார். இயக்குநர் இப்படி செய்வார் என்பதை எதிர்பார்க்காததால் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெண்களின் அழகை பாராட்டும் விதமாக இயக்குநர் அப்படி தேங்காயை வீசினாராம். அவர் பெண்களின் அழகை மலர்கள் அல்லது பழங்களுடன் ஒப்பிடுவாராம்.

பழம்
மற்றவர்களுக்கு மலர் அல்லது பழம் கிடைத்துள்ளது. ஆனால் எனக்கு தேங்காய் கிடைத்தது என்று என்னை நானே கிண்டல் செய்து கொண்டது உண்டு. தென்னிந்திய படம் ஒன்றை எடுத்தவர்கள் என்னை ராசியில்லாத நடிகை என்றார்கள். ஒரு படத்தில் நான் 3 பாடல்கள் மற்றும் சில காட்சிகளில் மட்டுமே நடித்தேன். அந்த படத்தின் தயாரிப்பாளர் பெரிய ஆள், படம் பெரிய படம், இயக்குநர் பெரிய ஆள் என்று நான் நடித்தது என் தப்பாகிவிட்டது.

பெரிய படம்
பெரிய ஆட்கள் சேர்ந்து எடுத்த பெரிய படம் ஓடாததற்கு நான் காரணம் என்று கூறிவிட்டார்கள். நான் தொடர்ந்து 2, 3 பிளாப் படங்களில் நடித்த நிலையில் அந்த படத்தில் நடித்ததால் என்னை ராசியில்லாதவள் என்றார்கள். இந்த ராசி விஷயத்தால் நான் கஷ்டப்பட வேண்டி இருந்தது. இத்தனைக்கும் இயக்கம், ஸ்க்ரிப்ட் ஆகியவற்றுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம்
முன்னதாக தென்னிந்திய படம் ஒன்றில் தனது இடுப்பை க்ளோசப்பில் காட்டியதாக டாப்ஸி தெரிவித்தார். தமிழ், தெலுங்கு படங்கள் மூலம் கிடைக்காத அங்கீகாரம் டாப்ஸிக்கு பாலிவுட்டில் கிடைத்துள்ளது. பாலிவுட்டிலும் போராடி தான் அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். தற்போது அவர் பாலிவுட்டில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











