ராஜ்கிரணால் சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த விஜய்.. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த இயக்குநர்!

சென்னை: சண்டக்கோழி படத்தின் பாதி கதையை மட்டும் கேட்டு விட்டு பிரபல நடிகர் அந்தப்படத்தில் நடிக்க மறுத்தது குறித்து பிரபல இயக்குநர் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்ற குடும்ப சித்திரத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து, ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

கடைசியாக அவரது இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி 2. விஷால், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

சண்டக்கோழி

சண்டக்கோழி

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி மனோ பாலாவுடன் அவரது யூட்யூப் சேனலுக்கு நேர் காணல் அளித்தார். அதில் தனது சண்டக்கோழி படம் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். சண்டக்கோழி படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது.

முதலில் சூர்யா

முதலில் சூர்யா

நடிகர் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று வசூலையும் அள்ளிக் குவித்தது. இந்நிலையில் தனது பேட்டியில் அந்தப் படத்திற்கு முதலில் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அது முடியாமல் போனதால் நடிகர் விஜயிடம் கதை சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுத்த விஜய்

மறுத்த விஜய்

ஆனால் முதல் பாதி கதையை மட்டும் கேட்ட நடிகர் விஜய், இந்தப் படத்தில் நடிக்க தனக்கு உடன்பாடில்லை என கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாதி கதையையும் கேளுங்கள் என்று கூறியபோதும் நடிகர் விஜய் இரண்டாம் பாதி கதையை கேட்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

வெற்றி விழாவில் விஜய்

வெற்றி விழாவில் விஜய்

முதல் பாதியை விடவும் இரண்டாவது பாதியில் அப்பா கேரக்டருக்குதான் அதிக முக்கியத்துவம் உள்ளது என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் சண்டக்கோழி படத்தில் விஷால் நடித்தார். ஆனால் படம் 225 நாள் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றி விழாவிற்கு விஜய் வந்திருந்தார்.

விஷால்தான் சரி..

விஷால்தான் சரி..

அப்போது எனக்கு கை கொடுத்து வேற லெவல்ல படத்தை கொண்டு போய் விட்டீர்கள் சார், சூப்பர் என்றார். அதற்கு நான் நீங்கள் தான் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களே என்று சொன்னேன். அதற்கு விஷால் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என்றார் என கூறியிருக்கிறார் லிங்குசாமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X