கடைசி விவசாயி படத்துல நடிக்க வேணாம்னு சொன்னேன்... யாரப்பத்தி சொல்றாரு மணிகண்டன்?
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி.
Recommended Video

காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டைரக்டர் மணிகண்டன்
தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தை இயக்கியதன்மூலம் சிறப்பான கவனத்தை பெற்றவர் டைரக்டர் மணிகண்டன். இவர் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து இயக்கிய ஆண்டவன் கட்டளையும் ரசிகர்களின் விருப்பத்தை பெற்றது.

கடைசி விவசாயி படம்
இந்நிலையில் தற்போது இவர் கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி இந்தப் படம் மூலம் மணிகண்டனுடன் இணைந்துள்ளார்.

வித்தியாசமான விஜய் சேதுபதி
விவசாயிகளின் வலிகள் மற்றும் வேதனைகளை கூறும்வகையில் இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தில் விஜய் சேதுதியின் லுக் வித்தியாசமான வகையில் காணப்படுகிறது. அடுத்தடுத்து வெளியான படத்தின் ட்ரெயிலர், பிரமோக்களும் கவனத்தை பெற்றுள்ளன.

திரையரங்குகளில் ரிலீஸ்
கடந்த ஆண்டே இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து ஓடிடியில் வெளியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றையெல்லாம் மீறி தற்போது படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி குறித்து மணிகண்டன்
இந்நிலையில் பிலிமிபீட் நேயர்களுக்காக பேட்டியளித்துள்ள கடைசி விவசாயி இயக்குநர் மணிகண்டன் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் வித்தியாசமானதாக உள்ள நிலையில், முன்னதாக அவரை இந்த கேரக்டரை ஏற்று நடிக்க வேண்டாம் என்று தான் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

விருப்பத்துடன் நடித்த விஜய் சேதுபதி
இந்த கேரக்டருக்காக ஒரு சிங்கிள் ஷாட்டிற்காக காடு, மலைகளை ஏறி இறங்க வேண்டும் என்பதாலும் வெயிட்டான காஸ்ட்யூமை மாட்டிக் கொண்டு நடிக்க வேண்டும் என்பதாலும் தான் அவ்வாறு கூறியதாகவும் ஆனால் விஜய் சேதுபதி விருப்பப்பட்டு இந்த கேரக்டரை ஏற்று நடித்ததாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கேரக்டர்களே முன்னிலை வகிக்க வேண்டும்
விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி தனக்கும் படமும் கதாபாத்திரங்களும் முன்னணி வகிக்க வேண்டும் என்பதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் படத்தில் அவரை நடிக்க வைக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மாறாத விஜய் சேதுபதி
முன்னதாக விண்ட் என்ற குறும்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்திருந்த நிலையில், அப்போது 3000 ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்த விஜய் சேதுபதியின் குணம் தற்போதுவரை மாறவில்லை என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். அப்போது இருந்த மெனக்கெடல் தற்போதும் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் தொழில்பக்தி
தொழில்மீதான ஆர்வம், பக்தி போன்றவை தற்போதுவரை விஜய் சேதுபதியிடம் தொடர்வதாகவும் முதல் படத்தில் நடிக்கும் ஆர்வம் ஒவ்வொரு படத்திலும் தொடர்வதாகவும் நடிப்பில் அவர் பக்குவப்பட்டுள்ளதாகவும் கோபங்கள் குறைந்துள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











