twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாரி செல்வராஜ் பிறந்த நாள்.. மகளிர் தினம்.. பெண் இயக்குநர்கள்.. பா. ரஞ்சித்தின் பக்கா பேட்டி!

    |

    சென்னை: ஆர்ட் கஃபே எனும் புதுமையான ரெஸ்டாரன்ட் துவக்க விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித் அளித்துள்ள முழு பேட்டி வெளியாகி உள்ளது.

    Recommended Video

    மாரிசெல்வராஜ் என் தம்பி | DIRECTOR PA RANJITH INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

    இயக்குநர் மாரி செல்வராஜின் பிறந்த நாள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் தனது தம்பி போன்றவர் என்றும், அவரது படைப்புகள் சமூக கருத்துக்கள் சார்ந்து, அருமையாக இருக்கிறது என்றும் கூறினார்.

    Director Pa Ranjith Interview!

    பா. ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படமும் மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது, நிச்சயம் அதை அவர் பூர்த்தி செய்வார் என ரஞ்சித் பேசினார்.

    பின்னர், நாளை கொண்டாடப்படவுள்ள மகளிர் தினம் குறித்த கேள்விக்கு, தமிழ் சினிமாவில், பல பெண் இயக்குநர்கள் சமீப காலமாக சிறந்த படங்களை இயக்கி வருகின்றனர்.

    எந்த பெண்ணுக்கும், ஆண் என்பவன் சுதந்திரம் கொடுக்க முடியாது. மேலும், பெண் இயக்குநர்கள், பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை தான் படமாக எடுக்க வேண்டும் என்று திணிக்கக் கூடாது என்றார்.

    சில்லுக்கருப்பட்டி இயக்கிய ஹலிதா ஷமீம், சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா உள்ளிட்ட பல பெண்கள் தற்போது, சினிமாவில் அசத்தி வருவதையும் பா. ரஞ்சித் மேற்கோள் காட்டி பாராட்டி இருந்தார்.

    இயக்குநர் பா. ரஞ்சித், நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள முழு பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க..

    English summary
    Director Pa Ranjith talks about Mari Selvaraj and Women Directors like Haleetha Shameem, Sudha Kongara etc., who ruled KTown latestly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X