ஒன்னாம் நம்பர் ஃபிராடு.. பிரகாஷ் ராஜ் அப்பா என்ன வேலை செய்தார்? கொந்தளித்த பேரரசு!
சென்னை: தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களித்தது ஒரு ஆரோக்கியமான அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. அரசியலை ஒதுக்கினால் அதன் விளைவுகள் சமூகத்தையே பாதிக்கும் என்று இயக்குநர் பேரரசு பேட்டி அளித்துள்ளார்.
அதில், முன்பு மாணவர்கள் வாக்களிக்காமல் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என இருந்தனர். ஆனால், இந்த தேர்தலில் இளம் பெண்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே தேர்தலில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு வாக்களித்ததை பார்க்க முடிந்தது. இது ஆரோக்கியமான ஒன்று. அரசியலை சாக்கடை என ஒதுக்கினால் அந்த சாக்கடை வீட்டுக்குள் வந்துவிடும். இதனால் ஒவ்வொரு குடி மகனுக்கும் அரசியல் மீதும், இந்த நாட்டின் மீதும் அக்கறை இருக்க வேண்டும். சில பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லாததால் வாக்காளர்கள் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து சரியாக இருந்தால் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரித்து இருக்கும் என்றார்.

இயக்குநர் பேரரசு: தொடர்ந்து பேசிய பேரரசு, நடிகர் பிரகாஷ் ராஜ் டிரைவர் மகனுக்கு விஜய் எப்படி சீட்டு கொடுத்தார் என கேள்வி எழுப்பியிருந்தார். நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். பிரகாஷ் ராஜின் அப்பா யார்? அவர் என்ன வேலை பார்த்தார். பிரகாஷ் ராஜின் அப்பா பெரிய நடிகரா? இல்லை தயாரிப்பாளரா? அந்த வேலையை தான் பிரகாஷ்ராஜ் பார்த்தாரா? அதேபோல கலைஞரின் அப்பா என்ன வேலை பார்த்தார். அவர் எப்படி அரசியலுக்கு வந்தார். திமுகவில் நேருவின் மகன் தேர்தலில் நிற்கிறார், அதேபோல ஸ்டாலினின் மகன் உதயநிதி எம்எல்ஏவாக போட்டியிட்டு உள்ளார். அமைச்சர்கள் அனைவரும் அவர்களது மகன்களையும் வளர்த்துக் கொண்டு இது ஆரோக்கியமானதா? பின் எப்படி நீங்கள் சமூக நீதியை பற்றி பேசுகிறீர்கள்.
ஒன்னா நம்பர் பிராடு: ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் அவர்களின் வாரிசு தான் அரசியலில் இருக்க வேண்டும் என்றார். சாமானியன் எப்படி அரசியலுக்கு வருவான். டிரைவர் மகனுக்கு விஜய் எப்படி சீட்டு கொடுத்தார் வன்மத்துடன் பேசிய பிரகாஷ் ராஜ் ஒன்னா நம்பர் பிராடு, இனி இவர் சுயமரியாதை, சமூக நீதி பற்றி பேசி மக்களை ஏமாற்றக்கூடாது. சமானியர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குநர் பேரரசு பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications