‘சோம பான ரூப சுந்தர’னுக்காக பலமுறை வாந்தி எடுத்த ‘பிக்பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா! Exclusive

சோம பான ரூப சுந்தரன் படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா தத்தா பலமுறை வாந்தி எடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சோம பான ரூப சுந்தரன் படத்தின் ஒரு காட்சிக்காக, மது அருந்துவது போல் நடித்து உண்மையிலேயே பலமுறை வாந்தி எடுத்து தத்ரூபமாக நடித்துக் கொடுத்தாராம் 'பிக்பாஸ்' ஐஸ்வர்யா தத்தா.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அப்படம் வெற்றி பெற்ற போதும், தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக, பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக, பொன்முடி இயக்கத்தில் 'சோம பான ரூப சுந்தரன்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. தற்போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால், அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டி படப்படிப்பு வேலைகள் பாக்கி இருக்கின்றன.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் துறுதுறுவென சிரித்தபடி வளைய வரும் ஐஸ்வர்யா, வேலை என்று வந்து விட்டார் படு சின்சியராம். இது குறித்து சோம பான ரூப சுந்தரன் பட இயக்குநர் பொன்முடி ஒன் இந்தியாவிற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:-

புதுமுகங்கள்:

புதுமுகங்கள்:

இப்படத்திற்காக முதலில் நான் ஒரு புதுமுகத்தை தான் தேடினேன். இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் படத்தில் எல்லோருமே புதுமுகங்கள் என்பதால், கதாநாயகியாவது ஏற்கனவே அறிமுகமானவராக இருக்கட்டுமே என நினைத்து தேடத் தொடங்கினோம்.

ஐஸ்வர்யா தத்தா :

ஐஸ்வர்யா தத்தா :

சில்க் ஸ்மிதா போன்று இருக்க வேண்டும் என நான் விரும்பியதால் பிந்துமாதவியை அணுகினோம். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் ஒரு நண்பர் மூலமாக யாஷிகா ஆனந்தை சந்தித்தோம். அந்த நேரம் தான் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துக்கான பேச்சுவார்த்தை போய்கொண்டிருந்தது. அதனால், ஐஸ்வர்யா தத்தாவை சந்தித்தோம். கதையை கேட்டதுமே நடிக்க ஒப்புக்கொண்டார்.

மது குடிக்கும் காட்சி:

மது குடிக்கும் காட்சி:

ஐஸ்வர்யா தத்தாவுக்கு இந்த படம் பெரிய பெயரை வாங்கி தரும். அவர் ஒரு நல்ல பெர்ஃபாமர். இந்த படத்தில் அவர் மதுகுடித்துவிட்டு வாந்தி எடுக்கும் காட்சிகள் உண்டு. எந்த உட்பொருளும் இல்லாமல் தானாகவே பலமுறை வாந்தி எடுத்தார். ஓரிரு முறையல்ல. பலமுறை அப்படி வாந்தி எடுத்தார்.

விருது நிச்சயம் :

விருது நிச்சயம் :

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் துறுதுறுவென சிரித்தபடி வளைய வரும் ஐஸ்வர்யா, வேலை என்று வந்துவிட்டால் படு சின்சியராம். இது குறித்து சோம பான ரூப சுந்தரன் பட இயக்குநர் பொன்முடி ஒன் இந்தியாவிற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:-

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X