twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘நான் சிரித்தால்‘ சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.. ஆத்மார்த்தமாக எடுத்துள்ளேன்.. இயக்குனர் ராணா !

    |

    சென்னை : அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி வழங்கும் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி கதாநாயகனாக நடிக்கும், 'நான் சிரித்தால்' படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குனர் ராணா சில தகவலை கூறியுள்ளார்.

    படத்தின் தலைப்பு போலவே இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். ஆனால், எந்த நகைச்சுவையும் திணிக்கப்பட்டதாக இருக்காது. கதையோடு ஒன்றிய நகைச்சுவையாக இருக்கும். குடும்பத்துடன் பார்த்து ரசித்துவிட்டு, போகும்போதும் நகைச்சுவையைக் கொண்டு செல்லலாம். இரண்டு மணி நேரம் சிரித்தோம் என்பதைத் தாண்டி, மன நிறைவு தரும் வகையில் நகைச்சுவையோடு ஒரு நல்ல கருத்தையும் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதாநாயகன் பாத்திரத்தை எல்லோர் மனதிலும் இருக்கின்ற ஆதங்கங்களை வெளிபடுத்துகிற மாதிரியாக அமைத்திருக்கிறோம்.

    Director raana Interview

    சமீபத்தில் முதல் பாடலை வெளியிட்டோம். அப்பாடலின் வரிகள் கொண்ட காணொளியை வெர்டிகல் வீடியோவாக வெளியிட்டோம். வெர்டிகல் வீடியோ என்றால், செல்போனுடைய திரைக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்படுவது. பிரேக்அப் பாடலின் வரிகள் கொண்ட காணொளியை உங்கள் செல்போனில் பார்க்கும் போது தான் அதனுடைய முழு அனுபவமும் உங்களுக்கு கிடைக்கும். அப்பாடல் வெளியானதும் வைரலாகிவிட்டது. ட்ரெண்டிங்கில் முதல் இடத்திற்கு வந்து விட்டது. இதுவரை 44 லட்சம் பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள்.

    கெஸ் பண்ணது வீண் போகல.. மாஸ்டர் 3வது லுக் நாளை ரிலீஸ்.. இந்த முறை விஜய்சேதுபதி தரிசனம்!கெஸ் பண்ணது வீண் போகல.. மாஸ்டர் 3வது லுக் நாளை ரிலீஸ்.. இந்த முறை விஜய்சேதுபதி தரிசனம்!

    சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அதில் ஒரு முக்கியமான காட்சிக்காக கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கிலும், ஒரு பாடலுக்காக காட்டுப் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன், கலை இயக்குனர் பிரேம் இருவரும் அதிக சிரத்தை எடுத்து ஒவ்வொரு காட்சிகளையும் புதுமையாகக் காட்டியிருக்கிறார்கள்.

    Director raana Interview

    ஐஸ்வரியா மேனன், கே.ஸ். ரவிகுமார், முனீஸ்காந்த், 'படவா' கோபி, ரவி மரியா, பாண்டியராஜன், ஷாரா, 'எரும சாணி' விஜய், இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் ஒரு திடுக்கிடும் வகையில் இருக்கும். கே.எஸ்.ரவிகுமார் சார் வில்லனாக நடித்திருக்கிறார். வழக்கமாக வரும் வில்லனாக இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான வில்லனாகவும், சிரிக்கும் படியாகவும் இருப்பார். அவரும், கதாநாயகனும் சந்திக்கின்ற காட்சிகளில் நகைச்சுவை கலந்த ஒரு த்ரில் இருக்கும்.

    இப்படத்தின் சிறப்பம்சம் சவாலான விஷயம் கதாநாயகன் சிரிக்கின்ற காட்சிகள் தான். ஏனென்றால், அவர் நிறைய இடங்களில் சிரித்துக்கொண்டே இருப்பார். அப்படி அவர் சிரிக்கும் போது காட்சிக்கு தகுந்தவாறு பார்வையாளர்களுக்கு சிரிப்பும், நகைச்சுவையும், பயமும், பரிதாபமும் ஏற்பட வேண்டும். இதற்கு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தால் மட்டுமே இதை செய்ய முடியும். மேலும், அவர் சிரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அதிக கவனத்துடன் இருந்தால் மட்டுமே பார்வையாளர்களை திருப்திப்படுத்த முடியும்.

    Director raana Interview

    இதுவரை 'ஹிப்ஹாப்' ஆதி நடித்த இரண்டு படங்களிலேயே இந்தப் படத்தில்தான் கடின முயற்சி எடுத்து நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் அவர் அவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தில்தான் வேறு ஒரு நபராக தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.

    நான் சிரித்தால் இது என்னுடைய முதல் படம் என்பதால் என்னுடைய முழு கவனமும் இந்த படத்தில் தான் இருந்தது. பலவகை கதைகளை படமாக்க வேண்டும். ஒவ்வொரு படத்தையும் ஆத்மார்த்தமாக எடுக்க வேண்டும். அது நம்மை உற்சாகப்படுத்தும் படியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

    நான் சிரித்தால் படத்தை உங்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலைபார்த்து கொண்டு இருக்கிறோம். அதற்கான தேதி முறையான வகையில் விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குனர் ராணா கூறினார்.

    English summary
    Director raana Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X