அந்த இடத்தில் வெட்கப்பட்டு நின்னேன்.. ‘மை லார்டு‘ பட இயக்குனர் பேச்சு!

சென்னை: ஜோக்கர், குக்கூ, ஜப்பான் ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைந்திரா ஆச்சா நடிப்பில் உருவான 'மை லார்டு' திரைப்படம் 13ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.இப்படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குனர்கள் பாலா, மாரி செல்வராஜ், லிங்குசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ், படத்தை பார்த்து முடித்ததும் என் உதவி இயக்குனருடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தேன். எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன அந்த கேள்வியை இந்த திரைப்படம் ரொம்ப அழகாக முன் வைத்திருக்கிறது என படத்தை வெகுவாக பாராட்டி பேசி இருந்தார்.

mylord sasikumar Raju Murugan
Photo Credit:

இயக்குநர் ராஜு முருகன்: இதையடுத்து பேசிய படத்தின் இயக்குனர் ராஜு முருகன், நானும் எச்.வினோத்தும் சேர்ந்து பரியேறும் பெருமாள் படத்தை பார்த்தோம். படத்தை பார்த்து விட்டு எச்.வினோத் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். என்ன என்று கேட்டேன், எப்படி ஒரு படத்தை எடுத்து இருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றார். அதைவிட பல மடங்கு எனக்கு வெட்கமாக இருந்தது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ஒரு பெரிய அதிர்வினை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய விட்டார் மாரி செல்வராஜ். இன்று வரைக்கும் அந்த அதிர்வு குறையாமல் ஒவ்வொரு படத்திலும் அடுத்தடுத்த உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் மாரி செல்வராஜூம் எனக்கும் ஒரு வழிகாட்டி தான்.

சோம்பேறித்தனம்: ஏனென்றால் எளிய மனிதர்களின் கதையை சொல்லி, அதை வெற்றியாக மாற்றுவது என்பது மிகப்பெரிய விஷயம். நான் கதை எழுத ஆரம்பிக்கும் போதே எனக்குள்ளேயே ஒரு சென்சாரை ஓபன் செய்து வைத்துக் கொண்டுதான் கதை எழுதுவேன். ஆனால், மாரி செல்வராஜின் வெற்றி எனக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கத்தையும், நம்பிக்கையும் கொடுத்தது. இந்த படத்தைப் பற்றி மாரிசெல்வராஜ் பேசிய அனைத்து வார்த்தைகளும் எனக்கே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல என்னைப்போல ஒருவனை சினிமாவில் கையைப் பிடித்து அழைத்து வருவது என்பது பெரிய விஷயம். ஏனென்றால், எனக்குள் பயம், சோம்பேறித்தனம், அலட்சியம் அதிகமாகவே இருந்தது அவைகள் அனைத்தையும் உடைத்து என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த பெருமை என் குருநாதர் லிங்குசாமியை சேரும். அவருடைய அலுவலகம் எனக்கு ஒரு பள்ளிக்கூடமாக இருந்தது என்று இயக்குநர் ராஜு முருகன் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X