“சினிமாவில் நாணயமானவர்களே இல்லை“… வருத்தப்பட்ட அஜித்.. மனம் திறந்த எஸ்.ஏ.சி!
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அஜித் குறித்து பல சுவாரசியமான தகவலை கூறினார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலே சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களை வைத்து பலதிரைப்படங்களை இயக்கி உள்ளார்.

மனம் திறந்த எஸ்.ஏ.சி
எஸ்.ஏ.சந்திரசேகர், பிலிமிபீட் யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அஜித் குறித்து மனம் திறந்து பல தகவலை கூறியுள்ளார். அதில், அஜித்தை 7 வருடங்களுக்கு முன்பு அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது ஷாலினி என்னை அழைத்து உங்கார சொன்னார்.

நெகிழ்ந்து போனேன்
கொஞ்ச நேரத்தில் கார்ப்ரேட் நிறுவனத்தின் அதிகாரி போல வந்து அருகில் அமர்ந்தார் அஜித். நான் அப்படியே மிரட்டுவிட்டேன். அஜித் எந்த விஷயத்திலும் கண்ணியமானார் என்பதை கேள்வி பட்டு இருக்கிறேன். அதை அன்று நான் நேரில் பார்த்தேன் என்று நெகிழ்ந்து பேசினார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

வருத்தப்பட்ட அஜித்
சினிமா குறித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டு இருந்தோம். திரைத்துறை பற்றி பல விஷயங்களை மனம் திறந்து பேசிய அஜித், சினிமாவில் யாரும் நாணயமானவர்களாக இல்லை என்றார். நேர்மையாக, ஒழுக்கமாக, நாணயமாக அவர் இருப்பது போல சினிமாவில் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற ஆசையை அன்று என்னிடம் வெளிப்படுத்தினார்.

அஜித்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்
நீங்கள் விரும்புவது போல ஒருகாலம் இருந்தது. அது ஒரு கோல்டன் பிரீயட் அந்த காலகட்டத்தில் நீங்கள் இல்லை என்று கூறினேன், அஜித்தை அன்று அப்படி பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு பிறகு இன்னும் நான் அவரை சந்திக்கவில்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
யார் இந்த எஸ்.ஏ.சி
எஸ்.ஏ.சந்திரசேகர் தறபோது 'யார் இந்த எஸ்.ஏ.சி' என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில், தான் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் கடந்து வந்தபாதையை பற்றியும் பதிவு செய்து வருகிறார். அதில் முதல் எபிசோடு சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.


Click it and Unblock the Notifications











