twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெடி உருவான விதம்…இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் சிறப்பு பேட்டி

    |

    சென்னை: ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி நடிப்பில் ஹாட் ஸ்டாரில் இன்று வெளியாகியுள்ள படம் டெடி.

    நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த சக்தி சௌந்தரராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    டெடி திரைப்படம் உருவான விதம் குறித்து க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் சக்தி சௌந்தரராஜன்.

    ஹாட் ஸ்டார் வெளியீடு

    ஹாட் ஸ்டார் வெளியீடு

    டெடி படத்தை குறித்து பேசிய சக்தி சௌந்தரராஜன், குழந்தைகளை கவரும் வகையில் டெடி படத்தை இயக்கியதாகவும், இந்த படம் ஹாட் ஸ்டாரில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், அதனால் எல்லா குழந்தைகளும் இதனை பார்த்து ரசிக்க முடியும் என கூறியுள்ளார்.

    4 டிப்பார்ட்மென்டின் உழைப்பு

    4 டிப்பார்ட்மென்டின் உழைப்பு

    டெடி பொம்மையை குறித்து பேசிய சக்தி சௌந்தரராஜன், தாய்லாந்திலிருந்து ஒரு நிறுவனம் டெடி மாஸ்கை வடிவமைத்தனர், கோகுல் என்பவர் டெடி பொம்மை வேடம் போட்டு நடித்தார், CG work மூலமாக டெடியை நடிக்க வைத்தது, நிம்மி என்பவர் டெடிக்கு குரல் கொடுத்தது என 4 டிப்பார்ட்மென்டின் உழைப்பு டெடியின் மேல் உள்ளது என அனைவரையும் பாராட்டி பேசினார்.

    திரைக்கதை அமைப்பு

    திரைக்கதை அமைப்பு

    திரைக்கதை அமைப்பில் மெடிக்கல் மாஃபியா போன்ற விஷயங்கள் சரியாக பொருந்தியதால் இந்த கதையை முடிவு செய்ததாகவும், குழந்தைகள் மட்டுமன்றி அடல்ட் ஆடியன்ஸ்சை கவரும் வகையில் கதை இண்டெலிஜெண்டாக இருந்தால் படம் ஒர்க் அவுட் ஆகும் என படத்தை இயக்கியதாக கூறியுள்ளார்.

    ஒன்றரை வருட உழைப்பு

    ஒன்றரை வருட உழைப்பு

    புதுமையான கதைகளை படமாக எடுக்க தங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு படத்திற்கும் 100 - 150 பேர் வரை ஒன்றாக இணைந்து ஒன்றரை வருடம் உழைக்கும் போது அந்த கதையில் ஒரு புதுமையான விஷயம் இல்லாமல் போனால் தனக்கே அது நம்பிக்கை அளிக்காது, அதனால் புதுமையான கதைகளை படமாக்குவதாக பேட்டியளித்துள்ளார் சக்தி சௌந்தரராஜன்.

    English summary
    Director Sakthi Soundar rajan special interview about Teddy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X