பெண் குழந்தைகளுக்கு சுதந்திரம், நம்பிக்கை கொடுங்கள் ...பெற்றோர்களுக்கு சமுத்திரக்கனி அட்வைஸ்

சென்னை : நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் சித்திரை செவ்வானம் படம் வெளிவந்துள்ளது.

Recommended Video

Chithirai Sevvaanam Samuthirakani பெற்றோர்களுக்கு சொல்லும் Advice | Filmibeat Tamil

அப்பா -மகள் உறவை சித்தரிக்கும் இந்த படத்தை இயக்கியுள்ளார் ஸ்டண்ட் சில்வா.

இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு நம்பிக்கையையும் சுதந்திரத்தையும் பெற்றோர்கள் தரவேண்டும் என்று சமுத்திரக்கனி கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்குனர் சமுத்திரக்கனி

இயக்குனர் சமுத்திரக்கனி

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி மற்றும் பூஜா கண்ணன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் சித்திரைச் செவ்வானம். இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் ஸ்டண்ட் சில்வா. முதல் படமாக இருந்தாலும் அவர் இந்த படத்தின் மூலம் தன்னை சிறப்பான இயக்குனராக பதிவு செய்துள்ளார்.

சித்திரைச் செவ்வானம் படம்

சித்திரைச் செவ்வானம் படம்

படத்தை தன்னுடைய தோளில் சுமந்து சிறப்பாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. அவருக்கு மகளாக நடித்துள்ள பூஜா கண்ணனும் தன்னுடைய முதல் படம் என்பதை வெளிப்படுத்தாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் தேர்ந்த நடிப்பால் படம் நல்ல பாராட்டுக்களை தற்போது பெற்றுள்ளது.

பெண் குழந்தைகளின் பிரச்சனைகள்

பெண் குழந்தைகளின் பிரச்சனைகள்

படிப்பதற்காக செல்லும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்த படம் வெளிக்காட்டியுள்ளது மேலும் பொள்ளாச்சி சம்பவத்தையும் இந்த படத்தில் எடுத்துக் கொண்டுள்ளது படத்தில் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

சமுத்திரக்கனியின் தேர்ந்த நடிப்பு

சமுத்திரக்கனியின் தேர்ந்த நடிப்பு

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சமுத்திரக்கனி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய மகளை மருத்துவராக வேண்டும் என்ற அவருடைய கனவுக்கு எவ்வாறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. என்பதை இந்த படம் கூறுகிறது.

நம்பிக்கையை கொடுங்கள்

நம்பிக்கையை கொடுங்கள்

இந்நிலையில் பில்மிபீட்டிற்காக பேசியுள்ள நடிகர் சமுத்திரகனி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நம்பிக்கையையும் சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையும் அவர் பேசியுள்ளார்.

தற்கொலை தீர்வு இல்லை

தற்கொலை தீர்வு இல்லை

எந்த ஒரு பெண் குழந்தையும் தற்கொலையை முடிவாக எடுக்க கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். டிஜிட்டல் மீடியாவே பிரச்சினையையும் கொடுத்து அதற்கான தீர்வையும் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பூஜா கண்ணன் சிறப்பான நடிப்பு

பூஜா கண்ணன் சிறப்பான நடிப்பு

சித்திரைச் செவ்வானம் படத்தில் தனது மகளாக நடித்துள்ள சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் சிறப்பாக நடித்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தில் அவர் மிகவும் எனர்ஜியாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கிளிசரின் இல்லாத நடிப்பு

கிளிசரின் இல்லாத நடிப்பு

படத்தின் சென்டிமென்ட் காட்சிகளில் தானும் பூஜா கண்ணனும் கிளிசரின் போடாமல் அழுது நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவே படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான சில்வா

சிறப்பான சில்வா

நாம் காணும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இயக்குனர் காணப்படுவதாகவும் ஸ்டன்ட் சில்வாவிடம் அது அதிக அளவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சில்வா தனது வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிரூபித்த சினிமா

ஜெய் பீம் படம் மூலம் சூர்யா உள்ளிட்டவர்களை கொண்டு சினிமா மீண்டும் தன்னை சிறப்பான வகையில் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சமூகத்தை ஜெய் பீம் படம் திரும்பிப் பார்த்த செய்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X