பிச்சைக்காரன் போட்ட பிச்சையால் தான் நான் வீடு வாங்கினேன்.. இயக்குநர் சசி உருக்கம்!

சென்னை: நான் இன்று சொந்த வீடு வாங்கியிருக்கிறேன் என்றால், அதற்கு 'பிச்சைக்காரன்' படம் போட்ட பிச்சைதான் காரணம் என்று இயக்குநர் சசி உருக்கமாகப் பேசியுள்ளார். விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்ட இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிச்சைக்காரன் படம் போட்ட பிச்சை: தமிழ் சினிமாவில் ரோஜாக் கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சசி. இவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'. அந்த படத்தை தொடர்ந்து இருவரும் 'நூறு சாமி' படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

Director Sasi Vijay Antony
Photo Credit:

இயக்குநர் சசி: இந்த படத்தின் ப்ரோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சசி, மதுரையில் நானும் என் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் என்னிடம், சொந்த வீடு வாங்கிட்டீங்களா? என்று கேட்டார். நான் இல்லை சார், இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் என்றேன். ஏன் என்று அவர் கேட்டபோது, நான் சினிமாவில் ஹீரோயிசம் இருக்குற மாதிரி படங்கள் பண்ணுறதில்லை. ஒரு கதையை யோசித்தால், அதை அப்படியே கரெக்டாக எடுக்கணும்னு நினைப்பேனே தவிர, அதுக்குள்ளே கமர்ஷியல் ஹீரோயிசம் இருக்க வேண்டும் என்று என் மைண்ட் யோசிக்காது என்று கூறினேன். ஒரு நல்ல கதையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க மட்டும்தான் நான் முயற்சி செய்கிறேன் என்றேன்.

ஹீரோயிசம் தப்பு இல்ல: உடனே என் நண்பர் ஹீரோயிசம் தப்புனு யார் சொன்னா? அதை முதல்ல உங்க மைண்ட்ல இருந்து எடுங்க. காந்தியை சவுத் ஆப்பிரிக்காவில் டிரைனில் இருந்து வெள்ளைக்காரன் பிடித்து தள்ளிவிட்டபோது, அந்த காந்தி அசிங்கப்பட்டுப் போய் உட்காராமல் கம்பீரமாக எதிர்த்து எழுந்திரிச்சு நின்றார் பாருங்க.. அதுதான் உண்மையான ஹீரோயிசம். நானும் என் தம்பியும் ஊரில் மளிகைக்கடை நடத்தினோம். ஆனால், எனக்குக் கதைகள் எழுதி தோணுச்சு, சென்னைக்கு வந்துட்டேன். இப்போ என் தம்பி அதே ஊர்ல மளிகைக் கடையை கவனிச்சுக்கிறான். அவன் தனது குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கிறானே.. அதுவும் ஒரு ஹீரோயிசம் தான்.

Director Sasi Vijay Antony
Photo Credit:

வீடு வாங்கிட்டேன்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு ஹீரோயிசம் இருக்கு. தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஓடுவதுகூட ஹீரோயிசம் தான். ஒருவர் அடிதடி சண்டை போட்டு மூணு பேரை அடிப்பது மட்டும் ஹீரோயிசம் இல்லை. உங்க மனசுக்கு எது ஹீரோயிசம்னு தோணுதோ அதை வளர்த்தெடுங்க. ஆனால், அதில் பொய் இருக்கக் கூடாது, ஏமாற்றுத்தனம் இருக்கக் கூடாது என்று நண்பர் விளக்கி கூறினார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் ஹீரோயிசம் பற்றிய தனது பார்வையே மாறியது. இப்போது நான் சொந்த வீடு வாங்கி விட்டேன் 'பிச்சைக்காரன்' படம் போட்ட பிச்சையால் சொந்த வீடு வாங்கிவிட்டேன் என்று சசி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நூறு சாமி: விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி கூட்டணியில் முற்றிலும் புதிய பரிமாணத்துடனும் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் 'நூறு சாமி'. இந்தப் படத்திலும் விஜய் ஆண்டனி முற்றிலும் மாறுபட்ட ஒரு எமோஷனல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'பிச்சைக்காரன்' படத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்த இயக்குநர் சசி, இந்த 'நூறு சாமி' படத்தில் அதைவிட ஒரு படி மேலே போய் சமூகக் கருத்துகளையும், மனித நேயத்தையும் அழுத்தமாகப் பேசியுள்ளார். சாம் சி.எஸ் இப்படத்திற்குப் பின்னணி இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்களும் டீசரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 'நூறு சாமி' திரைப்படம் வரும் ஜூன் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X