செல்வராகவன் ஒரு நடிப்பு ஸ்கூல் நடிகை நந்திதா ஸ்வேதா சிறப்பு பேட்டி
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா.
பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.
நந்திதா ஸ்வேதா சமீபத்தில் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நல்ல வரவேற்பு
நந்திதா ஸ்வேதா நடிப்பில் இந்த ஆண்டு ஈஸ்வரன், கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வருடம் நந்திதா ஸ்வேதாவிற்கு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது.

டெரர்ரான கதாபாத்திரம்
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை குறித்து வந்த கமென்டில் மறக்கமுடியாத கமெண்ட் என எதை சொல்லுவீர்கள் என்ற கேள்விக்கு, "டெரர்ரான கதாபாத்திரம்" , "என்ன இந்த மாதிரி பொண்டாடியாக நடிச்சு இருக்கீங்க" என வந்த ரசிகர்களின் கமெண்டை மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன்
இயக்குனர் செல்வராகவன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய நந்திதா, செல்வராகவன் படத்தில் நடித்து முடித்து வெளிவருவது ஒரு பள்ளியில் இருந்து பயின்று முடித்துவிட்டு வருவது போன்றது, அவருடைய படத்தில் நடித்த பின்னர் தான் நான் தெலுங்கு படத்தில் நடித்து ஃபிலிம் ஃபேர் விருது பெற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

லெஜெண்ட் S.J. சூர்யா
S.J. சூர்யாவை குறித்து பேசிய நந்திதா, இயக்குனராக அவர் லெஜெண்ட் எனவும், நடிகராக இந்த படத்தில் மிகவும்
டெரிபிஃக்காக இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். நடிகை ரெஜினா குறித்தும் இந்த பேட்டியில் பாராட்டி பேசியுள்ளார் நந்திதா ஸ்வேதா.


Click it and Unblock the Notifications











