ஆளவந்தான் கதை வேறு..நானே வருவேன் கதை வேறு..செல்வராகவன் சுவாரசியத்தகவல்!
சென்னை : நானே வருவேன் படம் குறித்து இயக்குநர் செல்வராகவன் பல சுவாரசியமானத் தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். மேலும் இந்துஜா ரவிச்சந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 29ந் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

நானே வருவேன்
திருச்சிற்றம்பலத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தனுஷின் நானே வருவேன் படம் செப்டம்பர் 29ந் தேதி வெளியானது. வித்தியாசமான, யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் தனுஷ் இப்படத்திலும் சும்மா பின்னியிருக்கிறார். வில்லனாக மிரட்டி இருக்கும் தனுஷின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது.

மாஸ் இல்லை
செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணி நீண்ட நாட்களுக்கு மீண்டும் இணைந்ததால் பலத்த எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம். ஆனால், இப்படம் தனுஷின் கதை, திரைக்கதை என்பதால், செல்வராகவன் படத்திற்கே உரிய மாஸ் இல்லாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

வெளியிட இதுதான் காரணம்
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள செல்வராகவன், பொன்னியின் செல்வன் பெரிய பட்ஜெட் படம் இந்த படத்தின்கூட நானே வருவேன் படத்தை வெளியிட வேண்டும் என்று பெரிய திட்டமெல்லாம் இல்லை, தசரா விடுமுறை என தொடர்ந்து ஒரு எட்டு நாள் விடுமுறை வந்தால், இந்த படத்தை இப்போது ரிலீஸ் செய்தோம் என்றார்.

ஆளவந்தான் கதை வேறு..நானே வருவேன் கதை வேறு
மேலும், இந்த படம் ஆளவந்தான் கதை போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். சினிமாவின் ஆதிகாலத்தில் இருந்து பார்த்தோம் என்றால், அண்ணன் கெட்டவன், தம்பி நல்லவன் என்ற கதை நிறைய இருக்கிறது. ஒரே ஒரு பாயிண்டை வைத்துக்கொண்டு படத்தை அந்த படத்துடன் ஒப்பிட்டுக்கூறக் கூடாது ஆளவந்தான் வேறு கதை, நானே வருவேன் வேறு கதை என்றார்.

நடிக்க இதுதான் காரணம்
மேலும், நானே வருவேன் படத்தில் நடித்தது பற்றி பேசிய செல்வராகவன், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் வரவில்லை. அடுத்த நாள் அந்த படப்பிடிப்பை முடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தால், அந்த கதாபாத்திரத்தை நான் வலுக்கட்டாயமாக செய்தேன் படத்தையும் முடிக்க வேண்டும் என்பதால் நடந்தது தான் அது என கூறினார்.


Click it and Unblock the Notifications











